மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

ஜெய் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு

ஜெய் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு

சென்னை 28, ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் மாதிரியான மக்கள் கவனம் ஈர்த்த பல படங்களைக் கொடுத்தவர் ஜெய். கமர்ஷியலாக நடிகராக ஜெய்க்கு தனி ரசிக பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய 37வது பிறந்த நாளை நேற்று சிறப்பாகக் கொண்டாடினார் நடிகர் ஜெய்.

ஜெய் பிறந்த தினத்துக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்தார் சிம்பு. நேற்று தேர்தல் நாளென்பதால், ஓட்டுப் போட்டுவிட்டு நேராக ஜெய்யை சந்திக்க சென்றிருக்கிறார் சிம்பு. கேக் வெட்டி, ஜெய்க்கு ஊட்டிவிட்டு கொண்டாடினார் சிம்பு. இந்த நிகழ்வில் நெகிழ்ந்துப் போய்விட்டாராம் ஜெய்.

ஜெய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ எனக்கு எதிர்பாராத மற்றும் ரொம்ப மகிழ்ச்சியான சர்ப்ரைஸ் இது. உங்க நேரத்தை செலவு செய்து வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி. என்னுடைய பிறந்த நாளை கூடுதல் சிறப்பாக்கியதற்கு நன்றி சிம்பு” என்று கூறியுள்ளார்.

சிம்புவும், ஜெய்யும் நெருங்கிய நண்பர்கள். சொல்லப் போனால் சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரஸ்பரம் உதவிகளை பரிமாறிக் கொள்பவர்கள். கூடுதல் தகவலாக, சுசீந்திரனை சிம்புவுக்கு அறிமுகம் செய்ததே ஜெய் தான். அதன்பிறகே, ஈஸ்வரன் சாத்தியமானது.

சிம்பு , ஜெய் என இருவருமே இசைப் பிரியர்கள். நடிகர் ஆதியின் படத்துக்கு தற்பொழுது இசையமைத்து வருகிறார் ஜெய்.

சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல படங்கள் கைவசம் இருக்கிறது. அதுபோல, ஜெய்க்கு பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, சுசீந்திரன் இயக்கத்தில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதன் 7 ஏப் 2021