மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தலைவி ரிலீஸ் தள்ளிப் போக காரணம்!

தலைவி ரிலீஸ் தள்ளிப் போக காரணம்!

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் , அரவிந்த்சாமி நடிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பயோப்பிக், படமாக உருவாகிவருகிறது ‘தலைவி’. இந்தப் படம் சொன்ன தேதியில் வெளியாவதில் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெப் தொடராக ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ‘குயின்’ வெப் சீரிஸ் வெளியானது. அடுத்ததாக, மீண்டுமொரு பயோபிக்காக ‘தலைவி’ உருவாகி வருகிறது. ஜெயலலிதா ரோலில் கங்கனாவும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேரடியாக வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இங்கும் லாக்டவுன் போட வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்தி படங்களையே மகாராஷ்டிராவில் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். தலைவியை வெளியிடுவது சந்தேகம் என்கிறார்கள். இந்தி தவிர்த்துவிட்டு, தமிழ், தெலுங்கு மட்டும் தலைவி ரிலீஸ் செய்யவும் முடியாது. அப்படி செய்தால், வசூலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதனால், சொன்ன தேதியில் வெளியாகுமா என்பது சந்தேகம் என்கிறார்கள்..

மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. தலைவி ரிலீஸ் எப்போது என்பது ஒருபக்கம் இருந்தாலும், படத்தின் பணிகளே இன்னும் முழுமையாக முடியவில்லையாம். படத்தின் லீட் கேரக்டர்களின் டப்பிங் பணிகளே இன்னும் முடியவில்லையாம். கங்கனா தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். அதோடு, தமிழ், தெலுங்கு வெர்ஷனுக்கு கங்கனாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் குரல் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். ரோலில் நடிக்கும் அரவிந்த் சாமி டப்பிங் பாதியில் நிற்கிறதாம். இவருக்கு, சம்பள பாக்கி வைத்தியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால், டப்பிங் வரமுடியாது என்று சொல்லியிருக்கிறார் அரவிந்த்சாமி. அவரை சமாதானப் படுத்தி வரவைத்திருக்கிறார்கள். அதுவும் பாதி டப்பிங் பதிவு மட்டுமே முடிந்திருக்காம். அதோடு, மற்ற பிரதான கதாபாத்திரங்களின் டப்பிங் பணியும் முடியவில்லையாம். இவ்விரு காரணங்கள் இப்படியே சிக்கலில் தொடர்ந்தால் ஏப்ரல் 23 தலைவி ரிலீஸாவது சந்தேகமே.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

புதன் 7 ஏப் 2021