மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

ப்ளு சட்டை மாறனுக்கு சிவப்பு கொடி காட்டிய தணிக்கை குழு!

ப்ளு சட்டை மாறனுக்கு சிவப்பு கொடி காட்டிய தணிக்கை குழு!

வீடியோ விமர்சனங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்ப்பதற்கு அடித்தளம் போட்டவர் தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன்  என்கிற சி. இளமாறன்தான்.

இவருடைய கடுமையான விமர்சனங்களில் இருந்து தப்பித்த  படங்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம்.  படம் வெளி வருவதற்கு முன்பு இவரை தனிப்பட்ட முறையில் கவனித்து தங்களது படம் பற்றி கடுமையான விமர்சனங்கள் வராமல் பார்த்து கொள்ளும்போக்கு இன்றுவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது

படங்களை இவர் விமர்சிக்கும் பாணி பலமுறை கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரை படமெடுக்க சொல்லி  அவரது யூடியூப் தளத்தில்  நெட்டிசன்கள் கமெண்ட்டுகள் மூலம் சவால் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர்,  'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தை 2021 ஏப்ரல் 5 ஆம் தேதி, சென்சார் குழுவினர் பார்த்தனர்.  

ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்திறகு தணிக்கை வழங்க மறுத்து தடை செய்துள்ளனர்.

அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம்.  சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது.

   

மதம் சார்ந்த சமகால பிரச்சனைகளையும், அரசியலையும்  மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும்  எடுக்கப்பட்ட "ஆன்டி இண்டியன்" படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது தமிழ் சினிமாவில் பலருக்கு அதிர்ச்சியையும், மாறனுக்கு எதிரானவர்களிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தடை குறித்து  தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில் 'தணிக்கை குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு   மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 7 ஏப் 2021