மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

கமல் படத்தில் மிகப்பெரிய மாற்றம்!

கமல் படத்தில் மிகப்பெரிய மாற்றம்!

மாநகரம், கைதி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர், விஜய்க்கு மாஸ்டர் படத்தைக் கொடுத்ததன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் கவனம் பெற்றுவிட்டார். தமிழைத் தாண்டி பிற மொழிகளிலிருந்தும் பட வாய்ப்புகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில், மாஸ்டருக்குப் பிறகு கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் லோகேஷ் கனகராஜ் . அதன்படி, கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு விக்ரம் என பெயரும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கான குறும்படமொன்றும் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பைத் துவங்குவதற்குள் தேர்தல் பரபரப்பு வந்ததால், பிரச்சாரத்தில் தீவிரமானார் கமல். தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், விக்ரம் படத்தை முதல்கட்டமாகத் துவங்குகிறார் கமல்.

ஹீரோவைப் போலவே, வில்லன் நடிகருக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் லோகேஷ். விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியைக் கொண்டுவந்து அசத்தியவர், விக்ரம் படத்திலும் அப்படியான திட்டத்தில் தான் இருக்கிறாராம். முன்னதாக, கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. சில காரணங்களால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் ராகவா.

கமலுக்கு வில்லனாக்க பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் பிரபல மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஃபகத் ஃபாசில் இந்த தகவலை உறுதியும் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஃபகத். தொடர்ந்து, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில், மூன்றாவதாக, கமல்ஹாசனுக்கு வில்லனாக தமிழில் நடிக்கிறார்.

விக்ரம் படத்தைப் போலவே, கமல் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெயிட்டிங்கில் இருக்கிறது. இயக்குநர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் நடுவே போய்க் கொண்டிருக்கும் சிக்கல் முடிவுக்கு வந்தால், இந்த வருடமே இந்தியன் 2வும் முடிந்துவிடும் என்பது உறுதி.

- ஆதினி

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

4 நிமிட வாசிப்பு

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

புதன் 7 ஏப் 2021