மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

விஜய் 65 படப்பிடிப்புத் திட்டம்!

விஜய் 65 படப்பிடிப்புத் திட்டம்!

இளம் தலைமுறை இயக்குநர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகளைக் கொடுத்துவருகிறார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜுக்கு ‘மாஸ்டர்’ படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். தற்பொழுது, இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நெல்சன். இவர் இயக்கத்தில் ‘டாக்டர்’ ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் அன்பறிவ் சண்டை இயக்கத்தில் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகிவருகிறது ‘விஜய் 65’. இந்தப் படத்தின் பட பூஜை சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிம்பிளாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகக் கூறியிருந்தோம்.

தேர்தல் நாளுக்காக ஒட்டுமொத்தப் படக்குழுவும் காத்திருந்தது. ஓட்டுப் போட்டுவிட்டு ஜனநாயகக் கடமையை முடித்தப் பின்னரே வெளிநாடு ஷூட்டிங் செல்ல வேண்டுமென காத்திருந்தார்கள் ஒட்டுமொத்தப் படக்குழுவினர். நேற்றைய தேர்தல் நாளில் சைக்கிளில் ஓட்டுப் போட வந்து இந்தியா அளவில் டிரெண்டானார் விஜய். பெட்ரோல், டீசல் விலை உயர்வை உணர்த்தவே சைக்கிள்ளில் விஜய் வந்தார் என்று ரசிகர்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில், உடனடியாக விஜய் 65 படத்தின் படப்பிடிப்புக்காக முதல்கட்டமாக ஜார்ஜியா செல்ல இருக்கிறது படக்குழு. இன்று அல்லது நாளை இரவு கிளம்பிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 10 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்க இருக்காம். எப்படியும், மே மாதம் அடுத்தக் கட்ட ஷெட்யூல் சென்னையில் துவங்க இருக்கிறது. முழுக்க முழுக்க விஜய்க்கான காட்சிகளே ஜார்ஜியாவில் எடுக்க இருக்கிறார்களாம்.

கூடுதலாக, விஜய் 65 பட பூஜைக்கு வரமுடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே. வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், இந்த ஜார்ஜியா பயணத்தில் நாயகி பூஜா இருக்கிறாரா என்பதும் சந்தேகம் என்கிறார்கள். அதுபோல, படத்தில் வில்லன் யாரென்பதையும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது படக்குழு.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை இறக்கினார் லோகேஷ். இந்த முறை அப்படி எதுவும் சர்ப்ரைஸ் இருக்கிறதா என்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

-ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 7 ஏப் 2021