மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

ஆர்ட்டிகிள் 15 ரீமேக் எப்போது?

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்  எப்போது?

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் எப்போது தொடங்குகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திரையுலகில் இருந்து பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. அப்படி, பாலிவுட்டில் இருந்து ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அர்ட்டிகிள் 15’ படமும் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகவும், இயக்குநராக அருண்ராஜா காமராஜ் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஓடிவிட்டது. ஆனால் படம் தொடங்கவில்லை. இந்த நிலையில், இந்தப் படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை தந்தார் உதய். அதுபோல, சமூக பொறுப்புடன் பெண்கள் முன்னேற்றத்தைப் பேசிய ‘கனா’ படத்தைத் தந்தவர் அருண்ராஜா காமராஜ். இவர்கள் கூட்டணி உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது தீ பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறார் உதயநிதி. அடுத்த கட்டமாக நடிப்பில் மீண்டும் களம் இறங்குகிறார். முதலாவதாக ஆர்ட்டிகிள் 15 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் இறுதி அல்லது மே முதலாம் வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

சாதிய அடக்குமுறைகளால் மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான சாட்டை அடியாக இந்தப் படம் இருக்கும். தேர்தலுக்கு முன்பே உருவாகியிருக்க வேண்டிய படம், தாமதமாகி தற்போது உருவாகிறது.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

செவ்வாய் 6 ஏப் 2021