மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

பிரபாஸை இயக்கும் லோகேஷ்... நடந்தது எப்படி?

பிரபாஸை இயக்கும் லோகேஷ்... நடந்தது எப்படி?

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது ‘மாஸ்டர்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாநகரம், கைதி என இவரின் முந்தைய படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றவை.

மூன்றாவது படத்திலேயே விஜய்யைத் தொட்டவரின் நான்காவது படத்தின் ஹீரோ கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க ‘விக்ரம்’ படம் உருவாகிவருகிறது. தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் போட்டா போட்டிப் போட்டுவருகிறார்கள். விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷின் அடுத்தப் படம் குறித்த புது தகவலொன்று வெளியாகியுள்ளது.

பாகுபலி நாயகன் பிரபாஸை இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். லோகேஷ் - பிரபாஸ் கூட்டணி எப்படி சாத்தியமானது என்று விசாரித்தால்… மாஸ்டர் படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் லோகேஷ். அப்போது, எதேச்சையாக பிரபாஸைச் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார். அப்போது, ஒன்லைன் ஒன்றைச் சொன்னாராம் லோகேஷ். அந்தக் கதை பிடித்துப் போக, லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் பிரபாஸ். தற்போது, இந்தப் படத்துக்கான ஃபைனல் ஸ்கிரிப்ட் பணிகளில் இருக்காராம் லோகேஷ்.

தற்போது, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ராதே ஸ்யாம் படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. அதோடு, ஆதிபுருஷ், சலார் படங்கள் பிரபாஸூக்கு லைன் அப்பில் இருக்கிறது. இவ்விரண்டு படங்களையும் முடித்தப் பிறகே, லோகேஷ் படம் தொடங்கும் என்று சொல்கிறார்கள். எப்படியும், 2022இல் இந்தக் கூட்டணி சாத்தியமாகும். விரைவிலேயே இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 6 ஏப் 2021