மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

4ஆவது முறையாக விஜய் படத்தில் காமெடியனாகும் நடிகர்!

4ஆவது முறையாக விஜய் படத்தில் காமெடியனாகும் நடிகர்!

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன். விஜய் 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொள்ள இருக்கிறார். ஆக்‌ஷன் என்டர்டெயின்மெண்ட் படமென்பதால் தேசிய விருது சண்டைக் கலைஞர்களான அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை விரைவில் யுரோப் நாடுகளில் நடத்த இருக்கிறார்கள். வெளிநாட்டு ஷூட்டிங்கிலிருந்து விஜய்க்கான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில், படத்தில் காமெடி ரோலில் யார் நடிக்கிறார் என்கிற கேள்விக்கான பதில் கிடைத்திருக்கிறது. பொதுவாக, விஜய் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். காமெடி டிராக்கில் விஜய்யின் காமெடிகள்கூட ஒர்க் அவுட்டாகும். அப்படி இருக்கையில், விஜய்யுடன் காமெடி டிராக்கில் நடிக்க யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறதாம்.

ஏற்கெனவே, மெர்சல், சர்க்கார், பிகில் படங்களில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் யோகி பாபு. இந்த நிலையில், விஜய் 65-ல் இணைந்தால் நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணையும்.

இந்த ஆண்டு தீபாவளிக்குள் முடிந்துவிட்டாலும், எப்படியும் அடுத்த வருட பொங்கலுக்கு தான் படம் வெளியாகும். ஏனெனில், சன் பிக்சர்ஸின் மற்றுமொரு தயாரிப்பான ரஜினி நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளிக்கு வர இருக்கிறது. ஆக, மாஸ்டர் போல, அடுத்த வருட பொங்கலுக்கு ‘விஜய் 65’ ரிலீஸ் உறுதி.

- ஆதினி

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 6 ஏப் 2021