மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

8 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் 'மதகஜராஜா'

8 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் 'மதகஜராஜா'

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன்முதலாக இணைந்து நடித்த 'மதகஜராஜா' திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.

விஷால், வரலட்சுமியுடன் சந்தானம், அஞ்சலி, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், கலாபவன் மணி, மணிவண்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ள 'மதகஜராஜா' திரைப்படத்தை சுந்தர்.சி குறிப்பிட்ட காலத்தில் இயக்கி முடித்தார். படத்தின் விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

படம் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினை, விஷாலுக்கு இருந்த பிரச்சினைகளால் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக வியாபாரம் இல்லை. ஆனால், அதனை போன்று இரு மடங்கு பணப் பிரச்சினை இருந்தது அதன் காரணமாக மதகஜராஜா வெளியீட்டை பலமுறை ஒத்திவைக்க வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் வெளியிடுவதற்கான யோசனையும் கைவிடப்பட்டது.

இந்த படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணியாற்றிய விஜய் ஆண்டனி நடிகர் விஷாலுக்கு இணையான வியாபார முக்கியத்துவம்மிக்க நடிகராக எட்டு ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறார். இதில் நடித்துள்ள நடிகர்களில் கலாபவன் மணி, சிட்டி பாபு மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயற்கை எய்தி விட்டனர்.

இந்த நிலையில் 'மதகஜராஜா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

செவ்வாய் 6 ஏப் 2021