மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

ஃபகத் பாசிலின் ‘இருள்’ விமர்சனம்!

ஃபகத் பாசிலின் ‘இருள்’ விமர்சனம்!

கொஞ்சம் வித்தியாசமான கதைக் களத்துடன் ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப் படுத்தும் மலையாள நடிகர் ஃபகத். இந்த முறை கொடுத்திருக்கும் த்ரில்லர் ஜானர் ‘இருள்’. படத்தின் கதை என்ன? படம் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

சீரியல் கில்லர் நாவல் எழுத்தாளர் செளப்பின் சகிர். இவரின் காதலி வக்கீல் தர்ஷனா ராஜேந்திரன். சந்தித்துக் கொள்ள முடியாத அளவுக்கு படு பிஸியாக இருக்கும் வழக்கறிஞர். வார இறுதிநாட்களில் ஒரு ட்ரிப் செல்ல இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்தப் பயணத்தில் நடக்கும் சம்பவமே கதைக்களம்.

கதை இதுதான். இரவு நேரமது. கடும் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது. ட்ரிப் செல்லும் காதலர்களான செளபினும் தர்ஷனாவும் கார் பழுதானதால் நடுவழியில் மாட்டிக் கொள்கிறார்கள். பயணத்துக்குச் செல்ல தயாராகும்போது இருவரும் போட்டுக் கொண்ட கண்டிஷன் மொபைல் கொண்டு வரக்கூடாது என்பது. ஆக, கையில் மொபைலும் இல்லை. நடு காட்டில் சிக்கிக் கொண்டவர்களின் கண்ணில் தூரத்தில் இருக்கும் வீடு ஒன்று தெரிகிறது. உதவிக் கேட்பதற்காக அந்த பங்களாவுக்குச் செல்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் நபர் ஃபகத் ஃபாசில். அந்த வீட்டில் இறந்த பெண்ணின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் முதல் முடிச்சி அவிழ்க்கப்படுகிறது.

அந்த பங்களா வீட்டுக்குச் சொந்தக்காரர் செளபின். அப்படியென்றால், ஃபகத் யார்? இருவரில் ஒருவர் பெண்களைக் கொள்ளும் சீரியல் கில்லர். இந்த இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொள்ளும் தர்ஷனா என்னவானார் என பதபதக்கும் பதிலுக்கான விடையே திரைக்கதை.

கொரோனா லாக்டவுனில் குறைந்த நேரத்தில், குறைவான பட்ஜெட்டில் படங்களைக் கொடுத்து அசத்திவருகிறார் ஃபகத். சமீபத்தில் C U SOON படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, ஒரே மாதத்தில் முடிக்கப்பட்ட படமே இந்த ‘இருள்’.

மூன்று நபர்கள், ஓர் இரவு, ஒரு பங்களா இதற்குள் முழு படத்தையும் முடித்திருக்கிறார்கள். இப்படியான, ஒரே இடத்துக்குள் கதைச் சொல்லும் போது ஆடியன்ஸூக்கு அலுப்புத் தட்ட வாய்ப்பு அதிகம். அப்படி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக் கொண்டதற்கே இயக்குநர் நசீப் யூசஃப்புக்கு பாராட்டுகள்.

அட்டகாச நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துக் கொண்டிருப்பவர் ஃபகத். இந்தப் படத்தை அசால்டாக நடித்துக் கொடுத்திருக்கிறார். காமெடியோ, சோகமோ, வில்லத்தனமோ எதுவென்றாலும் பொருந்திப் போகிறார் செளபின். பதட்டம், குழப்பம் இதற்கு நடுவே ஒப்பாரிவைக்கும் தேவதையாக தர்ஷனா ராஜேந்திரன் நல்ல நடிகை.

அட்டகாசமான ஒன்லைன் கிடைத்துவிட்டதும், திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் படத்தைக் கொடுத்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

செளபின் வீட்டுக்குள் சம்பந்தமே இல்லாத ஒரு நபர் இருக்கிறார். இவரும் தெரியாதது போல நடந்துகொள்கிறார். கொலை செய்யவில்லையென்றால் ஏன் போலீஸூக்குப் பயப்பட வேண்டும் என பல கேள்விகள் எழுகிறது. ஒரு த்ரில்லர் ஜானரின் ஸ்பெஷலே அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத தருணங்களை காட்சிப்படுத்துவது தான். செளபினும், ஃபகத்தும் சீரியல் கில்லர் பற்றிப் பேசும்போதே என்ன நடக்கப் போகிறதென்பது தெரிகிறது.

செளபினை வேண்டுமென ஃபகத் மாட்டுவிடுவதும் பளிச்சென தெரிகிறது. அதிர்ச்சியூட்டும் காட்சிகளோ, திகில் கிளப்பும் மர்மங்களோ என எதுவும் படத்தில் இல்லை. நேர்க்கோட்டில் தட்டையாக திரைக்கதை பயணிப்பதே படத்தை கெடுக்கிறது.

இருவர் சொல்லும் வார்த்தைகளில் எது பொய், எது உண்மை என்பதை நாயகி தர்ஷனா மட்டுமன்றி பார்வையாளர்களும் கண்டுபிடிக்க வேண்டும். இப்படியான காட்சிகளில் எத்தனை எத்தனையோ அதிர்ச்சிகளை திரையில் உண்டாக்கியிருக்கலாம். ஆனால், அதைச் செய்ய தவறிவிட்டது ‘இருள்’.

இறுதியாக, ஒரு த்ரில்லர் தர வேண்டுமென்று முடிவெடுத்தாகிவிட்டதென்றால், ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியில் உறைய வைக்க வேண்டும். குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டும். அப்படியான எதுவுமில்லாத வேண்டாத ஆணியாகிவிட்டது ‘இருள்’.

- ஆதினி

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

திங்கள் 5 ஏப் 2021