மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

சுல்தான் தயாரிப்பாளரின் ‘இதோ வரேன்டா' : திரையுலகம் அதிர்ச்சி!

சுல்தான் தயாரிப்பாளரின் ‘இதோ வரேன்டா' : திரையுலகம் அதிர்ச்சி!

ஒரு புதிய படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இணைய தளங்களில் வெளிவந்து அந்தப் படத்தின் வருவாயைக் கெடுத்து வருவதாக ஒவ்வொரு பெரிய படங்களின் வெளியீட்டின் போதும் தயாரிப்பாளர்கள் புலம்புவது தொடர்கதையாக நடந்து வருகிறது. காலம் காலமாக நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை திரைப்பட துறைசார்ந்த அமைப்புகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை

இணையதளங்களில் படம் வெளியாகி விட்டது என்பதை அதன் இணைப்பை நட்பு வட்டங்களில் பகிர்ந்து வந்த நிலைமாறி வாட்ஸ்அப், முகநூல், டெலிகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்

கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் ஏப்ரல் 2 அன்று வெளிவந்த 'சுல்தான்' படத்தின் பைரசி இணைப்பை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் ட்விட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்' படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி புரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லிங்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 5 ஏப் 2021