மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

‘த்ரிஷ்யமில் ரஜினி, மீண்டும் ஆளவந்தான்’ தாணு பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!

‘த்ரிஷ்யமில் ரஜினி, மீண்டும் ஆளவந்தான்’ தாணு பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ்.தாணு. தமிழில் மிக முக்கிய திரைப்படங்களைத் தயாரித்தவர். அசுரன் கொடுத்தவர் தற்பொழுது, கர்ணன் படத்தோடு வந்திருக்கிறார். ரஜினி , கமல் என இரண்டு உச்ச நடிகருக்கும் படங்களைத் தயாரித்து வெற்றி, தேல்விகளைக் கண்டவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி, கமல் குறித்து சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரஜினியின் ஆசை

மலையாளத்தில் 2013-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. மிகப்பெரிய ஹிட்டான இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தியாவைத் தாண்டி சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. கபாலி படத்துக்கு முன்பு த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி. ஏனெனில், கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு. அதனால், தன்னுடைய ஆசையை தாணுவிடம் கூறியிருக்கிறார் ரஜினி.

ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க த்ரிஷ்யம் தெலுங்கில் வெளியாகிவிட்டது. ரஜினிக்கும் தெலுங்கில் பெரிய ரசிக பட்டாளம் இருகிறது. தெலுங்கு மார்கெட் இல்லையென்றால் 25-30 கோடி வருவாய் வராது என்று தாணு கூறியதால், த்ரிஷ்யம் நடக்கவில்லை. ரஜினியின் ஆசையும் நிறைவேறவில்லை. அதன்பிறகே, ரஞ்சித் இயக்கத்தில் கபாலி நடந்திருக்கிறது. த்ரிஷ்யம் தமிழ் வெர்ஷன் கமல்ஹாசன் நடிக்க 2015ல் ‘பாபநாசம்’ படமாக மாறியது.

மீண்டும் ஆளவந்தான்

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 2001ல் வெளியான படம் ‘ஆளவந்தான்’. கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன் எழுத சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். தமிழில் வெளியான அதே நேரத்தில் இந்தியில் ‘அபய்’ எனும் பெயரிலும் வெளியானது. படம் வெளியான நேரத்தில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. பலத்த எதிர்மறை விமர்சனங்களை அன்றைய காலக்கட்டத்தில் பெற்றது. ஆனால், தற்பொழுது கல்ட் க்ளாசிக் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக பல கோடிகளை படத்தில் முதலீடு செய்தார் தாணு. திரைத்துறையில் தாணுவுக்கு மிகப்பெரிய சறுக்கலைக் கொடுத்தப் படமென, அவரே பின்னாளில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆளவந்தான் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக தாணு தெரிவித்துள்ளார். ‘ஆளவந்தான் சொன்னக் கதை வேறு, எடுத்தக் கதை வேறு, வெளியானக் கதை வேறு. 20 வருடம் கழித்து வரவேண்டிய படத்தை முன்கூட்டியே எடுத்துவிட்டோம். அதனால், மீண்டும் எடிட் செய்து கதையை மாற்றி எழுத இருக்கிறேன். மீண்டும் ஆளவந்தான் வெளியிட்டு வெற்றி பெறுவேன்’ என்று கூறியுள்ளார்.

ரஜினியின் கபாலி படத்துக்காக வானில் பறக்கும் விமானத்தில் விளம்பரம் செய்தவர். திரையுலகில் புதுமை செய்துவரும் தாணு, ஆளவந்தான் ரீ-ரிலீஸிலும் புதுமை செய்தாலும் வியப்பதற்கில்லை.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

திங்கள் 5 ஏப் 2021