மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

‘ப்ளாக் விடோ’ புது டிரெய்லர்; படத்தின் கதை, ரிலீஸ் தேதி!

‘ப்ளாக் விடோ’ புது டிரெய்லர்; படத்தின் கதை, ரிலீஸ் தேதி!

சூப்பர் ஹீரோக்களைப் போலவே, சூப்பர் ஹீரோயின் கதைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. டிசி நிறுவனம் ‘வொண்டர் வுமன்’ இறக்கியதால் அதற்குப் போட்டியாக மார்வெல் நிறுவனம் ‘கேப்டன் மார்வெல்’ படத்தை இறக்கியது. மீண்டும், மார்வெலிடமிருந்து வந்திருக்கும் மற்றுமொரு சூப்பர் ஹீரோயின் ஸ்டோரி ‘ப்ளாக் விடோ’.

புதிய கதாபாத்திரமொன்றும் கிடையாது. ஏற்கெனவே மார்வெல் படங்களில் பார்த்திருக்கும் ‘நட்டாஷா ரோமனோ’ எனும் கதாபாத்திரத்தின் மெயின் ஸ்டோரிதான். இந்த கேரக்டரில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடித்திருக்கிறார். ஒரு புரட்சிகர சூப்பர் ஹீரோயின் எப்படி உருவானார் என்பதே ஒன்லைன்.

'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தின் நிகழ்வுகளுக்கும், 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக இது அமைந்திருக்கும். சிவில் வார் காலக்கட்டத்துக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் நடாஷா வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது, கடந்துவந்த சிக்கல்கள் என்னென்ன, செய்த தவறுகள், புரட்சிகர நாயகியாக மாறிய இடமென கதை நகரும்.

ஏற்கெனவே படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது உறுதியாகியுள்ளது. ப்ளாக் விடோ படம் வருகிற ஜூலை 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பாகி வெளியாகிறது.

ஜூலை 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நேரத்தில் டிஸ்னி + ப்ரீமியமிலும் வெளியாகிறது. அதோடு, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 8ஆம் தேதி ஓடிடி ரிலீஸாக இருக்கிறது.

கடந்த 10 வருடங்களில் மார்வெலின் அவெஞ்சர்ஸ், அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்டப் பட திரைப்படங்களில் நடாஷாவாக ‘ப்ளாக் விடோ’ கதாபாத்திரத்தின் சாகசங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு, இந்த முறை சோலோவாக களமிறங்கி ஆக்‌ஷன் காட்டுகிறார். அதனால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

திங்கள் 5 ஏப் 2021