மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு கொரோனா!

ஒலிம்பிக்:  இந்திய வீரர்களுக்கு கொரோனா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இந்திய வீரர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24ஆவது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு பெருந்தொற்று சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐந்து பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் இந்த (2021) ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் நிலையில், போட்டியில் பங்கேற்ற உள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டு விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

ஞாயிறு 4 ஏப் 2021