மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

சுந்தர்.சி -யால் தடைபட்டு நிற்கும் ‘அரண்மனை 3’ !

சுந்தர்.சி -யால் தடைபட்டு நிற்கும் ‘அரண்மனை 3’ !

ராகவா லாரன்ஸின் காஞ்சனா பேய் பட வரிசைகளுக்குப் போட்டியாக இயக்குநர் சுந்தர்.சி களமிறக்கிவிட்ட பேய்கள் பட வரிசை ‘அரண்மனை’. இந்தப் பட வரிசையின் மூன்றாவது பாகம் ரிலீஸூக்குத் தயாராகியிருக்கிறது.

ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா, விவேக், கோவை சரளா, சம்பத், நந்தினி, மனோபாலா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் யோகிபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்க உருவாகிவரும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது. முந்தைய இரண்டு சீரிஸ்களிலும் த்ரிஷா மற்றும் ஹன்சிகா பேய்களாக டெரர் காட்டியிருந்தார்கள். காமெடியும் திகில் பேய்க் கதையுமாக ரசிகர்களின் ஃபேவரைட் படங்களானது.

இப்போது, மூன்றாவது பாகத்தில் பேயாக ஆர்யா நடித்திருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பணியாற்றிய சத்யா இசையமைத்திருக்கிறார். சுந்தர்.சி-யின் ஆஸ்தான செந்தில்குமார் ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷனும் முடிந்து படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருட பிப்ரவரியில் துவங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் முடிந்தது. தற்பொழுது, படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது. ரிலீஸ் மட்டுமே பாக்கி. ஆனால், இன்னும் ஏன் அரண்மனை 3 வெளியாகவில்லை என்று விசாரித்தால், புதிய தகவலொன்று கிடைத்தது.

இந்தப் படத்தை முழுமையாக விற்பனை செய்துவிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சுந்தர்.சி. ஆனால், இந்தப் படத்துக்காக இவர் சொல்லும் விலைதான் கொஞ்சம் அதிகமென்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்க இருப்பதாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், திரையரங்க ரிலீஸ், சேட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை என அனைத்தும் சேர்த்து 25 கோடி என விலை பேசுகிறாராம். இதனால், எந்த நிறுவனமும் படத்தை வாங்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தார் சுந்தர்.சி. ஆனால், படத்தின் வியாபாரம் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த முடியவில்லை.

அரண்மனை முதல் பாகம் 2014-ல் வெளியானது. அதில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, ராய்லட்சுமி, சந்தானம் நடித்திருந்தார்கள். அதுபோல, இரண்டாம் பாகமானது 2016-ல் வெளியானது. சுந்தர்.சியுடன் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம்பாஜ்வா, சூரி நடித்திருந்தார்கள். முதல் பாகம் நல்ல ஹிட். இரண்டாம் பாகம் ஓரளவுக்கு சுமாரான வசூலைப் பெற்றது. இந்நிலையில், பெரும் விலை சொல்லும் ‘அரண்மனை 3’ மக்கள் மனதை ஈர்க்குமா ? பார்க்கலாம் .

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 4 ஏப் 2021