மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

விஜய் 65 வில்லன் யார்? வித்யூத் ஜம்வால் பதிலால் குழப்பம்!

விஜய் 65 வில்லன் யார்? வித்யூத் ஜம்வால் பதிலால் குழப்பம்!

விஜய் நடிப்பில் வெளியான 64ஆவது படம் மாஸ்டர். இயக்குநராக லோகேஷ் கனகராஜ், வில்லனாக விஜய் சேதுபதி, அனிருத் இசை என படம் பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. படத்துக்குப் படம் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் விஜய்யின் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயார்ப்பில் ‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் எளிமையாக தொடங்கியது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வெளிநாட்டில் படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்ற நடிக நடிகைகளின் தேர்வும் ஒன்றன் பின் ஒன்றாக உறுதியாகி வருகிறது. இந்த நிலையில், விஜய் 65 பட வில்லனாக வித்யூத் ஜம்வால் ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக கெத்து காட்டியவர் வித்யூத். துப்பாக்கியில் இவரின் நடிப்பு, ஃபிட்னஸ், ஸ்மார்ட் வில்லத்தனம் பெரிதளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் நடித்த அதே வருடம் அஜித்துடன் ‘பில்லா 2’வில் நடித்திருந்தார். இறுதியாக, தமிழில் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தார். அதன் பிறகு, முழுக்க பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். இந்த நிலையில், மீண்டும் தமிழுக்கு வருகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அவர் போட்ட ட்விட் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்க்கு மீண்டும் வித்யூத் ஜம்வால் வில்லனாகிறார் என ஒருவர் ட்விட் போட, அதற்கு பதிலளித்திருக்கிறார். அதில், விஜய் படத்துக்காகக் காத்திருக்கிறேன். காத்திருக்கவும் விரும்புகிறேன். ஆனால், விஜய் 65 பொய்யான செய்தி என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து விசாரித்தால், விஜய் 65 வில்லன் கேரக்டருக்கு வித்யூத்திடம் தயாரிப்புத் தரப்பிலிருந்து யாரும் பேசவில்லை என்பதும் உறுதியானது. அதோடு, அவரே இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார். அதனால், மீண்டும் யார் விஜய்க்கு வில்லனாக இருக்கிறார் என்ற குழப்பமும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

- தீரன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 4 ஏப் 2021