மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

ஓடிடிக்கு வரும் த்ரிஷா படம்!

ஓடிடிக்கு வரும் த்ரிஷா படம்!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவதில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்கள் திரையரங்கில் வெளியானால் மட்டுமே மக்கள் ஆதரவு தருகிறார்கள். சின்ன பட்ஜெட் படங்கள் மற்றும் இரண்டாம்கட்ட நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாவதே பெரிய சாவல் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில், நியூ நார்மலில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக, ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்துக்கே திரையரங்கில் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை என்று சொல்கிறார்கள். இந்த நிலையில், த்ரிஷா நடித்திருக்கும் படமொன்று நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு வருகிறது.

த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க திருஞானம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பரமபத விளையாட்டு’. பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் பல முறை ரிலீஸுக்குத் தயாராகி தள்ளிப்போயிருக்கிறது. இறுதியாக, கடந்த வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர்கள் வரை ரிலீஸ் செய்தார்கள். இந்த பிப்ரவரி 28 வரைக்கும் வெளியாகவே இல்லை.

புது அப்டேட் என்னவென்றால், இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு சிறப்பாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. டாக்டர் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அரசியல்வாதி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்று, அதனால் பின்னர் ஏற்படும் பிரச்சினைகள் என படம் நீளுமாம்.

ஒரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால், பரமபத விளையாட்டு படமானது த்ரிஷாவின் 60ஆவது படம். விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்ட ஒரே நடிகை த்ரிஷா மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்', ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, வரலட்சுமி நடித்த ‘டேனி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ என நாயகி முக்கியத்துவம் கொண்ட அனைத்துப் படங்களுமே சமீப காலமாக ஓடிடியில் நேரடியாக வெளியாகிவருகிறது. அந்த வரிசையில் த்ரிஷாவின் படமும் வந்து இணைகிறது.

- ஆதினி

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

ஞாயிறு 4 ஏப் 2021