மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

இதுவரை வெளியாகாத ரஜினி ஸ்டில்!

இதுவரை வெளியாகாத ரஜினி ஸ்டில்!

இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இவ்விருது இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கடந்த தினங்களில் ரஜினிக்கு அரசியல் தலைவர்களில் துவங்கி சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ரஜினிக்கு எல்லோரும் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்துவர, கமல் மட்டும் சர்காஸ்டிக்காக பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தமிழ் திரைத்துறையில் பலரும் பாரதிராஜாவுக்கு இந்த விருது வழங்கப் பட வேண்டுமென்பதற்காக மத்திய அரசுக்கு கடிதமெல்லாம் எழுதினார்கள். யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட்டது திரைத்துறையை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அதே நேரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் ஒரு புகைப்பட பதிவு ஒன்றினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘இந்த விருது தலைவர் ரசிகர்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்’ என்று குறிப்பிட்டு பேட்ட படத்திலிருந்து ஒரு புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் படத்திலிருந்து இதுவரை வெளியாகாத ஸ்டில் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படமும் ரிலீஸாகி பெரியளவில் ஹிட்டானது. இந்தப் படத்துக்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் தான் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம். இந்தப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தற்பொழுது, விக்ரம், துருவ் விக்ரம் நடிக்க ‘சியான் 60’ படத்தை இயக்கிவருகிறார் கார்த்திக் சுப்பராஜ். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். பேட்ட படத்தை முடித்த சமயத்திலேயே மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என கார்த்திக் சுப்பராஜிடம் ரஜினி கூறியதாகச் சொல்லப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

சனி 3 ஏப் 2021