மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

மணிரத்னம் சொன்ன சொல்லால் சூடேறிய கே.வி.ஆனந்த்

மணிரத்னம் சொன்ன சொல்லால் சூடேறிய கே.வி.ஆனந்த்

கொரோனா அச்சுறுத்தல் உச்சக் கட்டத்தில் இருந்த நேரத்தில் திரையரங்கம் திறப்பதில் சிக்கல் நிலவி வந்தது. அதனால், ஒரு பெரும் இயக்குநர்கள் கூட்டம் ஓடிடியில் வெளியிட ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்க முன்வந்தனர். அந்த நேரத்தில் உருவான பல ஆந்தாலஜிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகியும் வருகின்றன. உதாரணமாக, பிரைம் வீடியோவில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்த ‘பாவக் கதைகள்’ , ஐசரி கணேஷ் தயாரித்த ‘குட்டி லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட ஆந்தாலஜி படங்கள் அடக்கம்.

இந்த வரிசையில் மணிரத்னமும் இயக்குநர் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்க உருவாகிவரும் ஆந்தாலஜி ‘நவரசா’. ஒன்பது இயக்குநர்கள் ஒன்பது கதைகளை இந்த ஆந்தாலஜியில் இயக்கிவருகிறார்கள். இதில் இடம் பெற்றிருக்கும் ஒன்பது இயக்குநர்கள் யாரென்று உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு, அவ்வப்போது இயக்குநர்களை மாற்றியும் வருகிறார்கள். நமக்குக் கிடைத்த தகவலின் படி, சுதா கொங்கரா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கே.வி.ஆனந்த், பொன்ராம், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன், ரவீந்திரன் பிரசாத் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இயக்குநர்களின் குறுங்கதைகள் படமாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் உருவான கதையைப் பார்த்த மணிரத்னம் படம் நன்றாக வரவில்லை என்று சொல்லியதாகக் கூறப்பட்டது. பொன்ராம் படத்தையே முழுதாக நீக்கிவிடுவதாகக் சொல்லப்பட்டது.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருகிறது. இந்தப் படத்தில் விக்ராந்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த மணிரத்னம், படம் நன்றாக வரவில்லை என மோசமான சில கருத்துகளைக் கூறியதாகச் சொல்கிறார்கள். அதனால் கே.வி.ஆனந்த் கோபமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டாராம். அதன்பிறகு வரவே இல்லையாம். தயாரிப்புத் தரப்பிலிருந்து கே.வி.ஆனந்தை சமாதானப் படுத்தும் வேலைகள் போய்க் கொண்டிருக்காம். தயாரிப்பாளரென்பதல் சக படைப்பாளியை இப்படியெல்லாம் விமர்சிக்கலாமா என வெகுண்டு எழுகிறாரா கே.வி.ஆனந்த். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான அநேகன், கவண், காப்பான் என மூன்று படங்களுமே பெரிதாக வசூலைக் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

சனி 3 ஏப் 2021