மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

விஜய் 65 படப்பிடிப்பில் மாற்றம்? இடத்தை மாற்றக் காரணம் !

விஜய் 65 படப்பிடிப்பில் மாற்றம்? இடத்தை மாற்றக் காரணம் !

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஜய் 65’. நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கிவிட்டது. எளிமையான முறையில் துவங்கிய பட பூஜைக்கு விஜய் விசிட் செய்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு நாயகியாக ‘புட்டபொம்மா’ புகழ் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இரண்டாம் நாயகியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பிறகு, ஒட்டுமொத்தப் படக்குழுவும் வெளிநாட்டு ஷூட்டிங்கிற்குச் செல்கிறார்கள். தேர்தல் நேரமென்பதால், ஒட்டுப் பதிவை முடித்துவிட்டு கிளம்ப இருக்கிறார்கள்.

வெளிநாட்டு ஷூட்டிங்கிற்காக லொக்கேஷன் பார்க்க ஏற்கெனவே ரஷ்யா சென்று திரும்பியிருந்தார் இயக்குநர் நெல்சன். புது ட்விஸ்ட் என்னவென்றால், படக்குழு படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்லவில்லையாம். விஜய் 65 படத்துக்கான ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் ஐரோப்பிய நாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. யுரோப் நாடுகளில் படப்பிடிப்பு நடத்தினால், அந்த நாட்டு அரசிடமிருந்து மானியம் கிடைக்கும். அதனால், லொக்கேஷனை மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே, தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்தை லண்டனில் படமாக்கியது படக்குழு. அதற்கு காரணமும் அந்த நாட்டு அரசிடமிருந்து கிடைக்கும் மானியம்தான் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படம் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், மே 13-ஆம் தேதியில் வெளியாக இருக்கிறது. விஜய் 65 பட இயக்குநரென்பதால், டாக்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

- தீரன்

.

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வெள்ளி 2 ஏப் 2021