மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ஷங்கருக்கு எதிராக லைகா வழக்குத் தொடர காரணம்!

ஷங்கருக்கு எதிராக லைகா வழக்குத் தொடர காரணம்!

ரஜினி நடிக்க 2.O படத்தை இயக்கியதைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன் 2’ படத்தை துவங்கினார் ஷங்கர். பல சிக்கல்களையும் தடைகளையும் தாண்டியே படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து, சென்ற வருட பிப்ரவரியில் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிக்கத் துவக்கியதால் , இந்தியன் 2 படப்பிடிப்பு அத்தோடு நின்றுபோனது. சென்ற வருட இறுதியான டிசம்பரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்கவில்லை. ‘இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பு மட்டும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. அதோடு, வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாக முடியாமல் இருந்துவந்தார் இயக்குநர் ஷங்கர். இந்நிலையில், இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நாயகனாக நடிக்க உருவாகும் படத்தை இந்த வருடத்திலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்த வருடத்திலும் இயக்கிமுடிக்க இருக்கிறாராம். அடுத்தடுத்து பிற படங்களில் ஷங்கர் ஒப்பந்தமானதும், லைகா நிறுவனம் உஷாராகியிருக்கிறது. இந்தியன் 2 படத்தை இந்த வருடமே முடித்துக் கொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 2021 வரை பிஸியாக இருப்பதாகவும், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க முடியாதெனவும் ஷங்கர் சொன்னதாகத் தெரிகிறது.

லைகாவுக்கு, ஷங்கருக்கும் நடுவே நடந்த பேச்சுவார்த்தை சமரசத்தை எட்டாததால், ஷங்கர் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது லைகா. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் சாராம்சமாக, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களுக்கு படமியக்க ஷங்கர் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதற்கு தடை கோரியும், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு, “இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனாலும், 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. 'இந்தியன் 2' படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

லைகா தொடர்ந்த வழக்கானது நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கரின் தரப்பிலான விளக்கத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமுடியாது எனவும், உடனடியாக ஷங்கரை தரப்பில் விளக்கம் தர வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கானது ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 1 ஏப் 2021