மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

தளபதி படத்தின் இரண்டாவது நாயகி இவர்தான்!

தளபதி படத்தின் இரண்டாவது நாயகி இவர்தான்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. படப் பிடிப்புக்கான பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் செம வைரல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிவுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன. எனவே படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார் என்னும் தகவல் மட்டுமே உறுதியாகியுள்ளது.

நேற்று (மார்ச் 31)படப்பிடிப்புக்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடக்குமாம். அதன் பிறகு, தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், தளபதி 65 குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி 65 படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இரண்டாவது நாயகியாக இணைந்திருக்கிறார். அவர் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கொடுத்தப் பேட்டியில், ``நான் தளபதி 65 படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் நான் நடிக்கும் காட்சிகள் மே மாதம் தான் படமாக்கப்படும். எனக்கு விஜய்யை நேரில் பார்ப்பது கனவாக இருந்தது. படத்தின் பூஜையின் போது அவரை சந்தித்தேன். மகிழ்ச்சி ’’என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வியாழன் 1 ஏப் 2021