மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறாரா?

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறாரா?

மலையாள திரையுலகை நடிகராக கட்டிப் போட்டு வைத்திருக்கும் மோகன்லால் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz: Guardian of D'Gama's Treasure) எனப் பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் துவக்க விழாவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்தப் படத்தை மோகன்லால் இயக்குவதே ஸ்பெஷல் என்றாலும், கூடுதல் சிறப்பு என்னவென்றால், 3டியில் படமானது உருவாக இருக்கிறது. அதோடு, இந்தப் படத்தில் மோகன்லால் லீட் ரோலில் நடிக்கவும் இருக்கிறார். மோகன்லாலுடன் ப்ரித்விராஜூம் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இவர்களோடு, ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega, Rafael Amargo இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.

எழுத்தாளர் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது. கதை இதுதான், நானூறு வருடங்களுக்கு முன்பு போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா வணிபம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் சேர்த்த சொத்துக்களை காக்கும் பாதுகாவலரான பாரோஸ் என்பவரின் கதையே இந்தப் படம். கேரளத்தில் உலாவும் புனைவுக் கதை இது. இதை மையமாகக் கொண்டே இந்த நாவல் உருவாகியிருக்கிறது. அதோடு, இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் ஜிஜோ பொன்னூஸ் எழுத இருக்கிறார். இவர் ஏற்கெனவே, 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்தை இயக்கியவர் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தப் படம் குறித்த பிக் நியூஸ் ஒன்று இணையத்தில் உலாவிவருகிறது. மோகன்லால் இயக்கும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அஜித்தை தனிப்பட்ட முறையில் மோகன்லால் கேட்டுக் கொண்டதாகவும், அதை அஜித் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்த செய்திக் குறித்து பாரோஸ் படக்குழுவினர் முழுமையாக மறுத்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் நடிக நடிகர்களைத் தேர்வு செய்யும் போது, ஒவ்வொரு கேரக்டரிலும் யார் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கலந்தாலோசிப்பது நடக்கும். அப்படி, அஜித் பெயரை பட்டியலில் யோசித்திருக்கலாம். அதற்குள், அஜித் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி பரவியதாகவே தெரிகிறது. ஆனால், தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்வதால் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி. யார் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

- தீரன்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வியாழன் 1 ஏப் 2021