மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

தொடங்கியது விஜய் 65 படப்பிடிப்பு: வெளிநாடு பறப்பது எப்போது?

தொடங்கியது விஜய் 65 படப்பிடிப்பு:   வெளிநாடு பறப்பது எப்போது?

இன்றைய காலக்கட்டத்தில் வசூலில் நம்பர் 01 இடத்தில் இருப்பது நடிகர் விஜய். படத்துக்கு படம் வசூலில் சாதனை படைத்துவருகிறார். அந்த வரிசையில் இந்த வருட ரிலீஸான மாஸ்டரும் பெரியளவில் சாதனைப் படைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் 65 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போய் மே 13ஆம் தேதி ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தள்ளிப் போனதால், இவரின் விஜய் 65 படமும் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் படத்தில் எந்த மாற்றமும் இல்லையாம். திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறார்கள்.

விஜய் 65 படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது. சன்பிக்சர்ஸ்ல் ஸ்டுடியோவில் படத்தின் துவக்க விழா நடைபெற்றது. விஜய் உட்பட படத்தின் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். சம்பிரதாயத்திற்காக ஓரிரு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டம். அதன்பிறகு, தேர்தல் முடிந்ததும் வெளிநாடு ஷூட்டிங்கிற்குச் செல்கிறார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமாம்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 31 மா 2021