மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

வடிவேலுவின் ‘நாய் சேகர்’ !

வடிவேலுவின் ‘நாய் சேகர்’ !

முன்னொருக் காலக் கட்டத்தில் இவரில்லாத திரைப்படமே இருக்காது. திரைப்படங்களில் இவருக்கென தனி ட்ராக் இருக்கும். காமெடியில் பட்டாஸாக வெடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. வருடத்திற்கு குறைந்தது பத்து பதினைந்து படங்கள் என கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு சமீப வருடங்களில் படங்கள் இல்லை. வடிவேலுவை ரசிகர்கள் மிஸ் செய்துவருகிறார்கள்.

கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். மிகப்பெரிய ரீ எண்ட்ரியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன்பிறகும், வடிவேலு வெளிச்சம் வெளியே தெரியவில்லை. அதோடு, இவர் நடிப்பதாகச் சொல்லப்பட்ட இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ன ஆனதென்றே தெரியவில்லை. வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார் அதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் கூட, சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை என்றே சொல்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் காமெடி நடிகராக திரையில் கலக்க இருக்கிறார் வடிவேலு. வடிவேலு லீட் ரீலில் நடிக்க சுராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு‘நாய் சேகர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை மற்றும் கத்திச் சண்டை படங்களில் நடித்தார் வடிவேலு. இந்த மூன்று படங்களிலுமே காமெடி பட்டாஸாக இருக்கும். குறிப்பாக, தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த கேரக்டர் தான் ‘நாய் சேகர்’. இந்த ரோலை மையமாகக் கொண்டே முழு நீளத் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்களாம். விரைவிலேயே படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, திருமுருகன் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இவர் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘எம் மகன்’ மற்றும் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படங்கள் பெரிய ஹிட். மீண்டும் அந்த காம்போ இணையவதாகச் சொல்லப்பட்டது. அந்தப் படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், சுராஜ் - வடிவேலு காம்போ உடனடியாகத் துவங்குவது உறுதியாகியிருக்கிறது.

- தீரன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 30 மா 2021