மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

சில மாற்றங்கள்.. பதட்டத்தில் வலிமை டீம் !

சில மாற்றங்கள்.. பதட்டத்தில் வலிமை டீம் !

அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து ஒரு ஸ்டில்லாவது வெளியாகிவிடாதா என தவியாய் தவித்து வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அஜித் 50வது பிறந்த தினமான மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன்பிறகு, படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலுக்கு பிறகே, அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.

படத்துக்கான 90சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டால் மொத்தப் படமும் முடிந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான ஃபைனல் எடிட்டையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். சமீபத்தில், டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு செய்யப்படாத முழு படத்தையும் படக்குழுவினர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, நெருங்கிய வட்டாரத்தினர் சிலரும் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

எமோஷனல் சென்ட்டிமெண்ட்டுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, படத்தின் கதை ஸ்மார்ட்னஸ் ஆக இருக்கிறது. ஆனாலும், எல்லா ஆடியன்ஸூக்கும் இந்தக் கதை புரியுமா என்கிற கேள்வியும் விவாதத்தின் போது எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், படக்குழுவுக்கு பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.

அறிவுஜீவித்தனமான எக்கச்சக்கப் படங்களை ரசிகர்கள் புரியாமலேயே தள்ளிவைத்த வரலாறு தமிழ் சினிமாவுக்கு உண்டு என்பதால், படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்திருக்காம் படக்குழு. அதனால், எடிட்டிங்கில் சில மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொண்டுவருகிறார். படத்தை ஆகஸ்ட்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

- தீரன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 30 மா 2021