மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

'அவன் இவன்' பட பிரச்சினை: மன்னிப்பு கேட்ட ஆர்யா

'அவன் இவன்' பட பிரச்சினை: மன்னிப்பு கேட்ட ஆர்யா

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகி மனுதாரரிடம் மன்னிப்பு கோரியதால் 'அவன் இவன்' பட வழக்கில் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாகக் காட்சியில் நடித்ததாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் தொடர்ந்த வழக்கில் நடிகர் ஆர்யா மனுதாரரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக்காட்சியில் நடித்ததற்காக நேரடியாக வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்து வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.

தமிழ் மலையாளத்தில் பிரபலமான நடிகராக தற்போது வலம் வரும் நடிகர் ஆர்யா 2011ஆம் ஆண்டு நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த நடிப்பில் பாலா இயக்கத்தில் அவன் இவன் படம் வெளியானது. அந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ்.தீர்த்தபதி மகன் சங்கராத்மத்ஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 2018 இல் பாலா, ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு நடந்துவந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை நேரில் ஆஜரான ஆர்யா அடுத்தடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆர்யாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

இதையடுத்து நேற்று, ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜரானார். வழக்கு, பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்யா தரப்பில் மனுதாரரான சங்கராத்மஜனிடம் அந்தக் காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கை நீதிபதி கார்த்திகேயன் முடித்து வைத்து வழக்கிலிருந்து ஆர்யாவை விடுவித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், ”இந்தப் படத்தின் காட்சிகள் யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு சங்கராத்மஜன் மனம் புண்பட்டு இருப்பதாக கூறுவது வருத்தமாக உள்ளது. அவரை இதுவரை நேரில் சந்திக்க இயலவில்லை. இன்று சந்தித்து நேரில் சந்தித்து அந்தக் காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.நடிகர் ஆர்யாவை பார்க்க அவரது ரசிகர்கள் அதிகளவில் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

-சக்தி பரமசிவன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

செவ்வாய் 30 மா 2021