மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

இயக்குனர் சரவண சக்தி மீது 'கதை திருட்டு' குற்றச்சாட்டு!

இயக்குனர் சரவண சக்தி மீது 'கதை திருட்டு' குற்றச்சாட்டு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றச்சாட்டுச் சுமத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ கொரோனா ஊரடங்கின்போது என்னைத் தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குநருமான சரவண சக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார், “மீன் வாங்கி கொடுப்பதைக் காட்டிலும் மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பது சிறப்பானது" என்கிற கொள்கையுடையவன் நான்

அதனால் நானொரு கதை சொல்கிறேன் அதற்குத் திரைக்கதை அமைத்துத் தாருங்கள் அதற்காக ரூ.50,000 சம்பளம் தருவதாகவும் கூறினேன். அதற்குச் சரவண சக்தி சம்மதித்தார்.

"எல்லாம் அவன் செயல்", "பைரவா" படங்கள் பாணியில் மருத்துவக் கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் வன்கொடுமை செய்து கொலை செய்துவிடுகிறார்கள். அந்த பெண் நாயகனின் தங்கை, நாயகன் சாதாரண ஆள்.

எனவே ஆக்‌ஷன் அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலிதனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலை செய்து பழி வாங்குகிறான் சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்க கூட முடியாது என்ற ஒருவரி கதை. இதற்கு திரைக்கதை அமைத்து அதற்கு" எங்க குலசாமி" என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள் என கூறி பணமும் அனுப்பி வைத்தேன்

என்னிடம் ஒப்புக்கொண்டபடி திரைக்கதை அமைத்து தரவில்லை அதன் பின்னர் நான் கூறிய ஒரு வரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி, அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துவருகிறது.

படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது. கதையின் கருவும் விவாத பொருளானது. இந்த நிலையில் 27.03.2021 அன்று சாலிக்கிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாட்களுடன் மதுபோதையில் வந்த சரவண சக்தி ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அலுவலக ஊழியர்கள் சரவண சக்தி வகையறாக்களுக்கு தெரியாமல் விருகம் பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பு சிங்காரவேலனை கொலை செய்து தலையுடன் தான் செல்வேன் என்று கொக்கரித்துக்

கொண்டிருந்த சரவண சக்தி வகையறா, காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர்

காவல்நிலையத்திலிருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை .இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது, தான் மதுரையில் இருப்பதாகக் கூறியவரிடம் இன்று ( 29.03.2021) காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்குக் காவல்நிலையம் வரவேண்டும் என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி வர உள்ளார்

சரவண சக்தி.

இவர் ஏதோ என் மீது புகார் கொடுக்கப்போவது போன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது

சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன் படம்," ஸ்பீடு" என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும் "பில்லா பாண்டி" படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும் அவரது மேற்பார்வையில் இவர் இயக்கிய படமாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

இதன்மூலம் சரவண சக்தி, சொந்தமாகக் கதை தயார் செய்து படம் இயக்கும் திறமை இல்லாதவர் அடுத்தவன் கதையை இரவல் வாங்கியோ அல்லது திருடியோ படம் இயக்குபவர் என்பதை புரிந்துகொள்ளலாம்

"எங்க குலசாமி" என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதையும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது இதனால் அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும், அவப்பெயரையும் திரைக்கதை

ஏற்படுத்தாது என்று நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்களிடம் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்பட்டு முறைப்படி அனுமதி கடிதம் பெறப்பட்டுள்ளது

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து வெற்றிபெறுவேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

திங்கள் 29 மா 2021