மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

படப்பிடிப்பில் ஆச்சரியப்படுத்தினாலும் இவ்ளோ செலவு தேவைதானா?

படப்பிடிப்பில் ஆச்சரியப்படுத்தினாலும் இவ்ளோ செலவு தேவைதானா?

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார் சிம்பு. இவரின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் படம் மாநாடு. இந்தப் படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். பொலிட்டிகல் டிராமாவாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 2019இல் தொடங்க வேண்டியது, சிம்பு படப்பிடிப்புக்கு வராததால் தள்ளிப்போய், பல கட்ட சிக்கல்களைச் சந்தித்தது. மகாமாநாடு வரை சென்று இறுதியாக 2020இல் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு ஒப்புக்கொண்டாலும் கொரோனா விடுவதாக இல்லை. மீண்டும் படப்பிடிப்பு நின்று போனது. இறுதியாக லாக்டெளன் தளர்வின்போது படத்தைத் தொடங்கினார்கள். சென்னை, புதுச்சேரி, ஊட்டி எனப் படப்பிடிப்பை விரைந்து முடித்திருக்கிறது படக்குழு.

இறுதியாக, படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கி வருகிறார்கள். அதற்காக சென்னை பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் மாநாடு செட்டப்பில் உருவாகியிருக்கிறது. அதில் பிரதானமாக எஸ்.ஏ.சந்திரசேகரின் புகைப்படங்கள் அந்த மாநாட்டின் போஸ்டர்களில் இடம்பெற்றிருக்கின்றன.

தனித்துவமான அரசியல் த்ரில்லர் கதையாக இருக்கும் என்றே படத்தில் பணியாற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அப்துல் காலிக் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகக் காட்சிப்படுத்தும் பிம்பத்தை இந்த ரோல் உடைக்கும் என்கிறார்கள்.

இந்த மாபெரும் மாநாடு காட்சிகளுக்காகத் தினமும் இரண்டாயிரம் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் கலந்துகொள்கிறார்களாம். எப்படியும் ஒருவருக்கு ஐந்நூறு முதல் ஆயிரம் வரை தினமும் சம்பளம் கொடுப்பார்கள். அதன்படி, கணக்குப் போட்டால் பட்ஜெட் எங்கேயோ போகிறது. அதோடு, கூடுதலாக விசாரித்தபோது, கடைசி ஐந்தாறு நாட்கள் ஷூட்டிங்கில் 5,500 முதல் 6,000 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் கலந்துகொள்ள இருப்பதாகவும் சொல்கிறார்கள். பிரமிக்கவைக்கும் விதமான செலவுடன் துணிந்து படத்தை தயாரித்துவருகிறார் சுரேஷ் காமாட்சி. நிச்சயம் திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி எங்கேயே போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரியாலிட்டியாக இருக்க வேண்டுமென்பதற்காக ஓல்டு ஸ்டைலில் இவ்ளோ செலவு செய்வது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

ரம்ஜானுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இறுதிக்கட்டப் படப்பிடிப்பே தற்போதுதான் தொடங்கியிருப்பதால் கொஞ்சம் தாமதமாகி வெளியாகும். மாநாட்டுக்குப் பிறகு கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் சிம்பு.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 28 மா 2021