மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

இந்தியா – இங்கிலாந்து: ஜெயிக்கப் போவது யாரு?

இந்தியா – இங்கிலாந்து: ஜெயிக்கப் போவது யாரு?

இன்று (மார்ச் 28) நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றுவது இந்தியாவா, இங்கிலாந்தா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், மார்ச் 26 அன்று நடந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் இன்று (மார்ச் 28) நடக்கிறது.

இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றுவது இந்தியாவா, இங்கிலாந்தா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட், டி20 தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் ஆறுதலுக்காக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்தும் உள்ளது.

இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இரு அணிகள் இன்று மோதுவது 103ஆவது ஆட்டமாகும். இதுவரை நடந்த 102 போட்டிகளில் இந்தியா 54இல், இங்கிலாந்து 43இல் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்கள் டை ஆனது. மூன்று போட்டிகள் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பகல் இரவு ஆட்டமாகப் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 28 மா 2021