மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

ஒளி வந்துவிட்டது; ஷாரூக் - அட்லீ படப்பிடிப்பு அப்டேட்!

ஒளி வந்துவிட்டது; ஷாரூக் - அட்லீ படப்பிடிப்பு அப்டேட்!

நான்கு படங்களில் பாலிவுட்டைத் தொட்டுவிட்டார் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தார். அதன்மூலம், தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநராகவே மாறிவிட்டார்.

தமிழில் விஜய்யை இயக்கிய அட்லீ, தன்னுடைய ஐந்தாவது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இயக்கத் தயாராகிவருகிறார். பிகில் வெளியானதிலிருந்தே ஷாரூக் - அட்லீ செய்தி பரவி வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், படம் குறித்த முக்கிய தகவலொன்று கசிந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷாரூக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்பு அட்லீக்கு வந்தது. “எல்லாம் தயார்... உடனடியாக, கதையை முடித்துவையுங்கள். விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்” என ஷாரூக் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் வந்தது. அதன்பிறகுதான், அட்லீயின் அலுவலகமே மின்னல் வேகத்தில் வேலையில் இறங்கியது.

தற்பொழுது, படப்பிடிப்புக்கான முன் தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார் அட்லீ. ஷாரூக்கான் இந்தப் படத்தில் இரண்டு ரோல்களில் நடிக்க இருக்காராம். அதோடு, படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சித்தார் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் ஷாரூக். அதை முடித்தகையோடு, அட்லீ படத்தை துவங்குகிறார்கள். அப்படிதான், ஆக்ஸ்ட் மாதத்தை லாக் செய்திருக்கிறார்கள். முதலில் அட்லீ படத்தை முடிக்கிறார் ஷாரூக். அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிக்கிறாராம். அதுபோல, அட்லீயும் ஷாரூக் படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை இயக்குவார் என்ற ஒரு தகவலும் நிலவுகிறது. சாத்தியமானால், அட்லீ - விஜய் இணையும் நான்காவது மேஜிக்கல் காம்போவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

ஞாயிறு 28 மா 2021