மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

ஜுவாலாவை திருமணம் செய்வது ஏன்? - விஷ்ணு விஷால் ஓபன் டாக்

ஜுவாலாவை திருமணம் செய்வது ஏன்? - விஷ்ணு விஷால் ஓபன் டாக்

தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு , பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா உடனான தன் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'காடன்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. காடன் படம் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்வில், விஷ்ணு விஷால், முதன்முறையாக ஜுவாலா கட்டாவுடன் தனது திருமணம் பற்றி அறிவித்தார். திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். அதே போன்று ஜிவாலா கட்டாவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீக்கிரமே மணமகள் ஆகப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஹைதராபாத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விஷ்ணு ஜுவாலாவின் பிறந்தநாளில் மோதிரம் அணிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் விஷ்ணு விஷாலுக்கு இது இரண்டாவது திருமணம். ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் என்னும் மகன் இருக்கும் நிலையில் 2017 ஆம் ஆண்டு ரஜினியை விவாகரத்து செய்தார். அதன் பிறகு அடிக்கடி தன் மகன் உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வார். இந்நிலையில் தான் தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். ஏப்ரல் மாதம் விஷ்ணு - ஜிவாலா திருமணம் நடக்கவிருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜுவாலா இது குறித்துப் பேசும் போது, ``நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக மரியாதை வைத்திருக்கிறோம். தற்போது திருமண பந்தத்தில் இணைகிறோம். ஜுவாலா மிகவும் பாசிடிவ்வானாவர்’’ என்று நெகிழ்ந்துள்ளார்.

- ஆதினி

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சனி 27 மா 2021