மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

கார்த்தியின் சுல்தான் சென்சார் நிலவரம்!

கார்த்தியின் சுல்தான் சென்சார் நிலவரம்!

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், எதற்கும் அஞ்சாமல் ரிலீஸில் உறுதியாக இருக்கிறது சுல்தான்.

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்னன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. மாஸ் மசாலா கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. கார்த்தியுடன் லால், நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேக் மெர்வின் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். கூடுதலாக, படத்துக்கு பின்னணி இசையை பிரத்யோகமாக யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டிருக்கிறார். சுல்தான் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருப்பதால், சமீபத்தில் சென்சாருக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தொடர்ந்து, படத்தை சென்சார் குழுவும் பார்த்தனர். கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக இருப்பதால் படத்துக்கு யு/எ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் இவர்களே நேரடியாக படத்தை வெளியிடுகிறார்கள். தெலுங்கு படத்திற்கான ஃப்ளேவரும் படத்தில் இருப்பது டிரெய்லரைப் பார்த்தாலே புரியும். தமிழைப் போலவே தெலுங்கு ரசிகர்களையும் டார்கெட் செய்தே படம் வெளியாகிறது.

கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால், சுல்தான் படமானது திரையரங்கில் வெளியாகி பத்து - பதினைந்து நாட்களுக்குள் ஓடிடிக்கும் வர இருக்கிறது.

- ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 27 மா 2021