மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

எதை குறைக்கணும்?: அப்டேட் குமாரு

எதை குறைக்கணும்?: அப்டேட் குமாரு

மக்களுக்காக உழைச்சி உழைச்சி ஏழெட்டு கிலோ எடை குறைஞ்சுட்டதா சொல்லி அமைச்சர் ஒருத்தர் உருக்கமா பேசுற வீடியோவை பார்த்தேன். இதுக்கெல்லாம் ஓட்டு போடனும்னா உடம்போட ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியா மெயின்டெயின் பண்ற கமல்ஹாசனுக்கு தான் ஓட்டு போடணும். தமிழ்நாட்டு கடன் குறைஞ்சாலும் பரவாயில்ல. கேஸ் விலை குறைஞ்சாலும் பரவாயில்லை... டீசல் பெட்ரோல் விலை குறைஞ்சாலும் பரவால்ல... இவங்க எடை குறைஞ்சு என்ன பண்றது?

நீங்க அப்டேட் பாருங்க

ரஹீம் கஸ்ஸாலி

மதுரை எயிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து, செங்கல் திருடியதாக உதயநிதி மீது பாஜக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார்.

வாய்ல அடி.. வாய்ல அடி... செங்கல்ன்னு சொல்லாதீங்க. எயிம்ஸ் மருத்துவமனைன்னு சொல்லுங்க.

ச ப் பா ணி

“கன்னியாகுமரி மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன்” - பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்ப நாகர்கோவில் மலேசியா ஆகிடுமே...

கோழியின் கிறுக்கல்!!*

சரியாக தேர்வு வரும் காலத்தில் கொரோனா அதிகமாவதற்கு ஏதேனும் மாணவர்களின் உள்நாட்டு சதி இருக்குமோ!?

ℳsd↬இதயவன்

பழநியை திருப்பதிபோல மாற்றுவோம் ~ முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போச்சு பஞ்சாமிர்தத்த லட்டு மாதிரி பிடிச்சு கொடுக்க போறாரா?!

மயக்குநன்

அதிமுகவுக்கென்று தனிக் கொள்கை இருக்கிறது!- ஓபிஎஸ்.

தனிக் கொள்கையா...

தனித்தனிக் கொள்கையா..?!

கோழியின் கிறுக்கல்!

பெட்ரோல் போட காசில்லாமல் வட்டியை தள்ளிக் கொண்டு செல்பவரிடம்,

தேர்தல் பறக்கும் படை பணம் கடத்தி செல்கிறாரா என்று சோதிக்கும் காலமிது!!

செங்காந்தள்

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ஐநாவில் உங்களை எதிர்த்து வாக்களிக்கக் கூட இல்லையேடா.

நாகராஜ சோழன் MA.MLA

இலவச வாஷிங் மிஷின் திட்டம் பெண்கள் விடுதலைக்கான கருவியாக பார்க்கிறேன்!” - அன்புமணி ராமதாஸ்

கொஞ்ச நாள் முன்னாடி தான் இலவசங்களை கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் அப்படின்னு இவரே தான் பேசினாரு...

balebalu

2020: கொரோனா அனுபவம் எல்லாம் எப்படி இருக்கு ?

2021: வேக்சின் அனுபவம் எல்லாம் எப்படி இருக்கு ?

போனில் நலம் விசாரிப்புகள்

மயக்குநன்

நான் வெற்றி பெற்றதும், கன்னியாகுமரி மாவட்டத்தை 'குட்டி சிங்கப்பூராக' மாற்றுவேன்!- பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்ப... கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரணும்னா பாஸ்போர்ட், விசா எடுக்க வேண்டி வருமோ..?!

மயக்குநன்

வெற்றியை நோக்கி தனித்துவம், தனித்தன்மை தத்துவத்தோடு பயணித்து வருகிறோம்!- சீமான்.

பயணங்கள் முடிவதில்லை தலைவரே..!

லாக் ஆப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 26 மா 2021