மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’

‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’

மான்ஸ்டர்வெர்ஸ் பட வரிசையின் அடுத்த படமான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ உலகம் முழுவதும் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தியாவில் வசூல் நிலவரம் டிரேடிங் வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

லெஜண்ட்ரி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மான்ஸ்டர்வெர்ஸ் (MonsterVerse) வரிசையில் நான்காவது படமாக ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 'காட்ஸில்லா' (2014), 'காங்: தி ஸ்கல் ஐலேண்ட்' (2017), 'காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்' (2019) உள்ளிட்ட படங்கள் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றன. இந்த வரிசையில் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ வெளியாகியுள்ளது. ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கோவிட் லாக்டெளனுக்குப் பிறகு வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மட்டும் வெளியான முதல் நாளிலேயே பல கோடி வசூலைக் குவித்துள்ளது.

காட்ஸில்லா படத்துக்கும், கிங்காங் படத்துக்கும் தனித்தனியாக பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் காட்ஸில்லாவுக்கும் கிங்காங்க்கும் யுத்தம் நடப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபெக்கா ஹால் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதன்படி பார்த்தால் இந்த வார இறுதியில், இந்தியாவில் மட்டும், 20 கோடிக்கு மேல் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வெள்ளி 26 மா 2021