மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

‘தேன்’: விமர்சனம்!

‘தேன்’: விமர்சனம்!

2020 ஆம் ஆண்டு வெளியான பென்குயின், பொன்மகள் வந்தாள் ,மாரா, சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற தரமான தமிழ் படங்களுக்கு மத்தியில் ‘திரிஷம் 2’ என்ற மலையாள திரைப்படமும் தமிழ்பேசும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிலமாதங்களாக தமிழகத்தில் தியேட்டர்கள் திறந்திருந்தாலும் குறைந்த நிதியில் தயாரான பலபடங்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத நிலையில் தற்போது ஒரு மலைக்கிராம வாழ்க்கை முறை உண்மைகளை பின்னணியாகக் கொண்டு வந்துள்ள, ‘தேன்’ திரைப்படம் ஒருதரமான படமாக ரசிகர்களிடம் மிகச் சிறந்த விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சிறு கிராமம் ஒன்றில் தேன் எடுப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர் தருண்குமார். பக்கத்து கிராமத்தில் உள்ள நாயகி அபர்ணதியின் அப்பா உடல்நலனுக்காக தேன் எடுத்து வந்து தருகிறார்.

அந்தப் பழக்கத்தில் அபர்ணதியும், தருணும் காதலர்களாகிறார்கள். ஊர் வழக்கப்படி வாழை மட்டையை சரி பாதியாகக் கிழித்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மட்டை அப்படிக் கிழியவில்லை. அதனால், ஊர்க்காரர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை. இருந்தாலும் அதையும் மீறி தருணும், அபர்ணதியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகளும் பிறக்கிறாள். பின்னர் கடும் வயிற்றுவலியால் அவதிப்படுகிறார் அபர்ணதி.

மனைவிக்கு சிகிச்சை அளிக்க மலைக்கிராமத்தை விட்டு கீழே ஊருக்கு வருகிறார் தருண். ஆனால், அதிகார வர்க்கம் அவரை அலைக்கழிக்கிறது. மனைவிக்கு சிகிச்சை அளித்தாரா, அபர்ணதி நலமடைந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை .இயக்குநர் கணேஷ் விநாயகன் ஒரு அப்பாவி மனிதனின் வாழ்க்கையில் உள்ள சில பல பிரச்சினைகளை யதார்த்தமாக இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

மலைக்கிராமங்களின் அழகை தன் கேமராவுக்குள் அப்படியே பதித்திருக்கிறார் சுகுமார். பேரழகிலும் இயற்கையின் ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது என்பதை நினைக்கும் போது பதைபதைப்பு வருகிறது. சனத் பரத்வாஜின் பின்னணி இசை நேர்த்தியாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.

ஏற்கனவே தமிழ் படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார் இப்படத்தில் கதாநாயகனாக மலைக்கிராமத்து மனிதராக இயல்பாகப் பொருந்திப் போகிறார். இடைவேளைக்குப் பின்தான் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவர் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு அலையும் போது நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

காதலியாக இருக்கும் போதும் சரி, மனைவியாக மாறும் போதும் சரி, அம்மாவான பின்பும் சரி அபர்ணதி அந்தந்த காலகட்டத்திற்கத் தேவையான பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்தக் காலத்து இளம் நாயகியர் இப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது ஆச்சரியம்தான். கதையும், கதையில் தன் கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

சூப்பர் குட் லட்சுமண் முக்கியத்துவம் பெறுகிறார். எங்கிருந்தோ வந்த தருண் குமாருக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுத்தர உதவியாக இருந்து மனதில் இடம் பிடிக்கிறார். மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இடைத்தரகராக அருள்தாஸ், நாயகி அபர்ணதியின் அப்பாவாக தேவராஜ் அவரவர் கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். வாய் பேச முடியாத தருண், அபர்ணதியின் குழந்தையும் சில காட்சிகளில் அழ வைத்துவிடுகிறார்.

அடையாள அட்டைகளை வாங்க கதாநாயகன் அலைவதையும், ஒவ்வொரு அட்டையை வாங்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதைக் காட்டுவதிலும் கொஞ்சம் டாகுமென்டரி உணர்வு வந்துவிடுகிறது. ஆனாலும், முடிவில் நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது கண்ணீர் வரவழைத்துவிடும்.

தருண்குமார், அபர்ணதி நடிப்பில் சனத் பரத்வாஜ் இசையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்.எபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திரையரங்கிற்கு வந்துள்ள தரமான திரைப்படம் தேன்

-சக்தி பரமசிவன்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

வெள்ளி 26 மா 2021