மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

முரட்டுதனமான நூறு அண்ணன்கள் - சுல்தான் ஒரு வரி கதை!

முரட்டுதனமான நூறு அண்ணன்கள் - சுல்தான் ஒரு வரி கதை!

கார்த்தி, ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் மார்ச் 24ஆம் தேதி அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின், நடன இயக்குநர் ஷோபி, படத்தொகுப்பாளர் ரூபன், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்

எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது…

"இந்த நிகழ்ச்சி குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்தப்பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தைச் சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமா துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கையை இந்தப் படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது.

முரட்டுத்தனமான நூறு அண்ணன்கள் சாந்தமான ஒரு தம்பி என்கிற ஒரு வரியிலேயே நான் ஒப்புக்கொண்ட கதைதான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று இரண்டு வருடங்கள் காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இந்தப் படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்படும்.

ஒரு படத்துக்குக் கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இந்தப் படத்துக்கு வில்லன் ராமச்சந்திர ராஜு சிறப்பாக அமைந்திருக்கிறார். அவர் வந்து நின்றாலே பயமாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை நடிகர் லால் கட்டப்பா மாதிரி. எந்தக் காட்சியாக இருந்தாலும், எந்தப் பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாகச் செய்கிறார். யோகி பாபுவின் படங்களைப் பார்த்து ரசித்துச் சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இந்தப் படம் மூலம் முதன்முதலாகப் பணியாற்றும்போதுதான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. அவருக்கு ஒருமுறை போன் பேசும்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவரிடம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்தது. இப்படிப் பல திறமைகள் அவரிடம் உள்ளது.

நெப்போலியன் அவர்கள் நண்பராகத் தான் இந்தப் படத்தில் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டு வண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாகச் செய்திருக்கிறார். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும்கூட.

ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைத்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்

இப்படம் திரையரங்குகளில்தான் வெளியாக வேண்டும் என்கிற உறுதியுடன் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி."

இவ்வாறு அவர் பேசினார்.

-இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 26 மா 2021