மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

மணிஹெய்ஸ்ட் சீசன் 5 ரிலீஸ் எப்போது?

மணிஹெய்ஸ்ட் சீசன் 5 ரிலீஸ் எப்போது?

உலகமெங்கும் திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பு வெப் சீரிஸூக்கும் கிடைத்துவருகிறது. சரக்கு ரயில் வண்டி போல 20, 30, 50 மணிநேரங்கள் என வெப் சீரிஸை எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் படைப்பாளிகள். எக்கச்சக்க வெப் சீரிஸ்கள் கொட்டிக் கிடந்தாலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான ஒரு சில வெப் சீரிஸ்கள் மட்டுமே பெரும் கவனத்தை ஈர்க்கிறது. அப்படி, இந்த லாக் டவுண் நேரத்தில் உலகமெங்கும் பெரும் வெற்றியைப் பெற்ற வெப் சீரிஸ் மணிஹெய்ஸ்ட்.

ஸ்பெயின் நாட்டுத் தொடரான La casa de papel எனும் வெப் சீரிஸை வாங்கி 2017ல் வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ் . திருடன் போலீஸ் கதைக்குள் திருடர்களை புரட்சியாளர்களாக்கி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது மணி ஹெய்ஸ்ட். மொத்தமாக நான்கு சீசன்கள் வெளியாகியிருக்கிறது.

முதலிரண்டு சீசன்களில் வங்கியில் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு திருட்டு குழு. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக பணமெடுக்கும் வங்கிக்கு செல்லாமல் பணத்தை அச்சடிக்கும் ஸ்பெயின் ராயல் மிண்ட்டில் பணத்தை திருட திட்டமிடுகிறது. வங்கிக்குள் செட்டிலாகி பணத்தை அச்சடித்து எடுத்துச் செல்வதே திட்டம். அதை எப்படி நிறைவேற்றினார்கள் என்பதே இரண்டு சீசன்களின் களம்.

மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களில் அடுத்த கொள்ளைக்கு தயாராகிறது டீம். இந்தமுறை தங்கத்தைக் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். மாஸ்டர் மைண்ட் புரொஃபசர் தலைமையில் நடக்கும் இந்த கொள்ளையை மையமாகக் கொண்டு பல கதைகளை சுவாரஸ்யமாகப் பேசியிருக்கும் இந்த வெப் சீரிஸ்.

நான்கு சீசன்களுமே உலகளவில் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, இந்த லாக் டவுனில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸூம் இதுதான். இந்நிலையில், இதன் ஐந்தாவது சீசனுக்கு வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். மணிஹெய்ஸ்டின் இறுதி சீசனாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. மொத்தம் 15 எப்பிசோட்களுடன் ஆகஸ்ட்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 26 மா 2021