மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மோகன்லால்... கதை இதுதான்!

இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மோகன்லால்... கதை இதுதான்!

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். நடிகராக நான்கு தேசிய விருதுகள், தயாரிப்பாளாராக ஒரு தேசிய விருது, எக்கச்சக்க மாநில விருதுகள் என மலையாளத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் நடிகர் மோகன்லால். மலையாளம் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக, தயாரிப்பாளராக இருந்தவர் அடுத்தக் கட்டமாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மோகன்லால் இயக்க இருக்கும் படத்துக்கு . 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz: Guardian of D'Gama's Treasure) எனப் பெயரிடப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால், இந்தப் படம் 3டியில் உருவாக இருக்கிறது. அதோடு, இந்தப் படத்தில் மோகன்லால் நடிக்கவும் இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மோகன்லாலுடன் ப்ரித்விராஜூம் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இவர்களோடு, ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega, Rafael Amargo இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.

எழுத்தாளர் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது. கதை இதுதான், நானூறு வருடங்களுக்கு முன்பு போர்ச்சுக்கிசியரான வாஸ்கோடகாமா வணிபம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் சேர்த்த சொத்துக்களை காக்கும் பாதுகாவலான பாரோஸ் என்பவரின் கதையே இந்தப் படம். கேரளத்தில் உலாவும் புனைவுக் கதை இது. இதை மையமாகக் கொண்டே இந்த நாவல் உருவாகியிருக்கிறது. அதோடு, இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் ஜிஜோ பொன்னூஸ் எழுத இருக்கிறார். இவர் தான் 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்தை இயக்கியவர் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தப் படம் குறித்து ஜிஜோ பொன்னூஸ் கூறும்போது, “ மோகன்லாலிடம் கதையைச் சொன்னதும் அவரே இயக்குவதாகக் கூறினார். குழந்தைகளுக்கான பேண்ட்ஸி கதையான இது, அனைத்து வயதுடைய ரசிகர்களையும் கவரும் விதமாக கதையை மாற்றி அமைத்திருக்கிறோம்” என்றார்.

இந்தப் படத்திற்கான துவக்கவிழா கொச்சியில் நடைபெற்றது. இதில், மோகன்லால் குறிப்பிடும்போது, "நான் நடிகனாகவோ, இயக்குநராகவோ ஆவேன் என்பதைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. ஆனால், சினிமாவே எனது வாழ்க்கையும் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது. இப்போது பாரோஸ் மூலம் சினிமாவில் இயக்குநராக எனது புதிய பயணத்தைத் துவங்கியிருக்கிறேன். உங்களுடைய ஆதரவும் ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு துணை இருக்கும்” என்றார்.

வாஸ்கோடகாமா பற்றிய கதையென்பதால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த கேரளா, கேவா பகுதிகளிலும் போர்ச்சுக்கல் நாட்டிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 26 மா 2021