மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

2ஆவது ஒருநாள் போட்டி: இந்திய அணி தொடரை வெல்லுமா?

2ஆவது ஒருநாள் போட்டி: இந்திய அணி தொடரை வெல்லுமா?

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் இன்று (மார்ச் 26) புனேயின் நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்று ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 23ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் இன்று (மார்ச் 26) பகல் இரவாக நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். தவான், லோகேஷ் ராகுல், கேப்டன் வீராட் கோலி, குர்னால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, ‌ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். தங்களது முதல் ஆட்டத்திலேயே குர்னால் பாண்டியாவும், பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்திருந்தனர். தற்போது ஸ்ரேயாஷ் அய்யர் காயம் அடைந்து விலகி உள்ளதால், அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே அந்த அணி டெஸ்ட், டி20 ஓவர் தொடரை இழந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடும். கேப்டன் மார்கனுக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே.

இரு அணிகளும் இன்று மோதுவது 102ஆவது ஆட்டம். இதுவரை நடந்த 101 போட்டியில் இந்தியா 54இல், இங்கிலாந்து 42இல் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்கள் டை ஆனது. மூன்று போட்டிகள் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

-ராஜ்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

வெள்ளி 26 மா 2021