மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

மலையாளியாகும் மதுரைக்காரர் சூரி

மலையாளியாகும் மதுரைக்காரர் சூரி

சினிமாவில் பட வாய்ப்பு அதிகமாக வரவேண்டும் என்பதற்காகவே பெரும்பாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விரும்புகிறார்கள் பிரபலங்கள். ஆனால், பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆரவ், ஹரிஷ்கல்யாண், ரைசா வில்சன் என ஒரு சிலருக்கு மட்டுமே பிக்பாஸ் கைகொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் மலேசிய பாடகர் முகேன் ராவ் ஒருவர். பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான இவர் நாயகனாக நடிக்க உருவாகிவரும் படம் ‘வேலன்’.

அறிமுக இயக்குநர் கவின் இயக்க பிரபு, சூரி, ஸ்ரீரஞ்சனி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதோடு, முகேனுக்கு நாயகியாக ‘கென்னடி கிளப்’ மீனாட்சி நடித்திருக்கிறார். இயக்குநர் சிவாவிடம் வீரம் முதல் விஸ்வாசம் படம் வரை உதவியாளராகப் பணியாற்றியவர் கவின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூரி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாளியாக நடித்திருக்கிறார் சூரி. இந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் மம்மூக்கா தினேஷன். வெறித்தமனான மம்மூட்டி ரசிகராக படத்தில் நடித்திருக்கிறாராம். மம்மூக்கா ரசிகரென்பதால் கோட்டசாமி எனும் பெயரை மம்மூக்கா என படத்தில் மாற்றி கொள்வாராம். பொதுவாக, விஜய், அஜித், ரஜினி, கமல் ரசிகர்களாகவே தமிழில் காமெடியன்கள் நடிப்பது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக, மலையாள நடிகர் மம்மூட்டியை ரெஃபரன்ஸ் எடுத்து நடித்து அசத்தியிருக்காராம் சூரி.

பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை படத்தின் கதை நகர்கிறதாம் . தமிழ், மலையாளம் கலந்த படமாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக, சூரி எந்த ஊர் காரராக நடித்தாலும் மதுரை ஸ்லாங்கிலேயே பேசிக் கொண்டிருப்பார். இந்தமுறை அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக முறையாக மலையாளத்துக்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறார்கள்.

படத்துக்கான முக்கால் பாகப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே மீதமிருக்கிறதாம். தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பை முடித்துவிட இருக்காம் படக்குழு. வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயனின் டான் மற்றும் முகேன் ராவுடன் வேலன் என மாறி மாறிப் ஒவ்வொரு படத்திலும் நடித்துவருகிறார் சூரி.

- ஆதினி

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

வியாழன் 25 மா 2021