மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

விஜய் 65 : விஜய்க்கு ஜோடியாகும் நடிகை !

விஜய் 65 : விஜய்க்கு ஜோடியாகும் நடிகை !

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு நாயகி நடிக்கும் நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த வருட டிசம்பரில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க உறுதியானார் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் ரிலீஸூக்கு ரெடி. வருகிற மே மாதம் ரம்ஜானுக்கு வெளியாகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிக நடிகைகளை ஒப்பந்தம் செய்துவருகிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். முதல்கட்டமாக, விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதை அறிவித்துள்ளது. அதற்கான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தமிழில் ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படம் பெரிய ஹிட். அதனால், மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.

-ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

புதன் 24 மா 2021