மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

கார்த்தியின் சுல்தான் டிரெய்லர் ரிலீஸ்!

கார்த்தியின் சுல்தான்  டிரெய்லர் ரிலீஸ்!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சுல்தான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ல் மூன்று படங்கள் வெளியானது. 'தேவ்', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' மற்றும் ஜோதிகாவுடன் 'தம்பி'. இந்த மூன்றில் இரண்டு படங்கள் பெரிய ஹிட். 2020-க்கு டார்கெட் செய்த படம் ‘சுல்தான்’. கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போய் இந்த வருடம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரம், கொரோனா இரண்டாம் அலை என எத்தனைச் சிக்கல்கள் வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் தெளிவாக இருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட இயக்குர் பாக்கியராஜ் கண்ணன் சுல்தான் படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்திக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். திண்டுக்கல் பகுதிகளில் படத்துக்கான படப்பிடிப்புகள் நடந்தது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துவரும் ராஷ்மிகாவின், தமிழ் அறிமுகமாக சுல்தான் இருக்கப் போகிறது. அதோடு, கார்த்திக் படத்துக்கும் தெலுங்கில் மார்கெட் இருப்பதால் தெலுங்கிலும் படம் வெளியாக இருக்கிறது.

கைதி, மாஸ்டர் பணியாற்றிய சத்யன்சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், விவேக் மெர்வின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். யோகிபாபு, நெப்போலியன் மற்றும் லால் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக சுல்தான் இருக்கும் என்பது டிரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. சொல்லப் போனால் மினி வெர்ஷன் கேஜிஎஃப் திரைப்படம் போலவே இருக்கிறது டிரெய்லர்.

நூறு தலை ராவணனாக கார்த்தி மிரட்டும் சுல்தான் டிரெய்லர் வீடியோ :

- தீரன்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

புதன் 24 மா 2021