மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

துருவநட்சத்திரம் தாமதமாக இதுதான் காரணம் !

துருவநட்சத்திரம் தாமதமாக இதுதான் காரணம் !

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவநட்சத்திரம்’. விக்ரமுடன் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார்.

ஏழு நாடுகளில் பிரம்மாண்டமாகப் படப்பிடிப்பு நடந்தது. அதோடு, படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கிறார். படத்திலிருந்து இரண்டு டீஸர்கள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்தப் படம் கடந்த 2016-ல் துவங்கப்பட்டது. ஐந்துவருடங்களாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. துருவநட்சத்திரத்தில் நிஜமாக என்ன தான் பிரச்சனை?

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தான் நடந்துகொண்டிருக்கிறது என படக்குழு கூறிவந்தாலும், துருவநட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுமையாக முடியவில்லையாம். விக்ரம் நடிக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். அதற்கு, கெளதமேனனிடம் க்ளைமேக்ஸ் கதையையும், ஸ்கிரிப்டையும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, படத்தின் கதையை முழுமையாக எழுதி முடிக்காமலேயே படப்பிடிப்புக்கு செல்பவர் கெளதம்மேனன். இதுவரை கெளதம் எடுத்த எந்தப் படத்தின் க்ளைமேக்ஸூம் நடிகர்களுக்கு முன்கூட்டியே சொல்லமாட்டார். இந்நிலையில், படத்தின் ஸ்கிரிப்ட் கொடுத்தால் நடிக்க வருவதாக விக்ரம் கூறியதாகத் தெரிகிறது. இருவருக்கும் நடுவே நடக்கும் உரசலால் படம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதனால், பணத்தைப் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கே கடன்சுமை .

விக்ரமுக்கு கோப்ரா படத்துக்கு டப்பிங் பணிகள் மட்டும் மீதமிருக்கிறது. அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் நடிக்கும் ‘சியான் 60’ படங்களின் படப்பிடிப்பிலும் மும்மரமாக இருக்கிறார்.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 24 மா 2021