மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

கே.ஜி.எஃப் இயக்குநர் நெகிழ்ச்சி... புது அப்டேட் !

கே.ஜி.எஃப் இயக்குநர் நெகிழ்ச்சி... புது அப்டேட் !

இந்தியாவின் சென்சேஷனல் ஹீரோவாக இருக்கிறார் கன்னட நடிகரான யஷ் . இவரின் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பாகுபலி 2வுக்குப் பிறகு கே.ஜிஎஃப் 2வுக்கு தான் இப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் சேப்டர் 1 படமானது கடந்த டிம்பர் 2018ல் வெளியானது. தமிழ் வெர்ஷனுக்கு நிழல்கள் ரவியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டாம் பாகமே சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கன்னட நடிகர் யஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

சமீபத்தில் படத்துக்கான தமிழக உரிமையை படக்குழு விற்பனை செய்தது. அதன்படி, ட்ரீம் வாரியஸ் நிறுவனத்துக்கு பெரும்விலைக்கு விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

படத்தின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் குறித்து விசாரித்தால், அனைத்துக் கட்டப் பணிகளும் படத்தில் முடிந்துவிட்டதாம். யஷ் பேசியிருக்கும் டப்பிங் அசத்தலாக வந்திருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறி நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். இறுதிக்கட்ட டப்பிங் & மாஸ்டரிங் பணிகள் மட்டும் போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், லாக்டவுன் மாதிரியான எந்த சிக்கலும் வரவில்லையென்றால் சொன்னபடி, திரையரங்கில் ராக்கி பாய் வருவார் .

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

புதன் 24 மா 2021