மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் கே.வி.ஆனந்த் படக் கதை !

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் கே.வி.ஆனந்த் படக் கதை !

விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சொல்லப்போனால், இந்தப் படம் 2019ல் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் சாதனைப் படைத்தது.

இந்தப் படம் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு டிரேடிங் வட்டாரத்தில் மிகப்பெரிய மதிப்பைக் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் விஜய் - அட்லீ - ஏஜிஎஸ் காமினேஷனுக்காக ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் வருகிறது. இந்நிலையில், புதிதாக மற்றுமொரு படத்தையும் எடுத்துவிட திட்டமிட்டிருக்கிறது ஏஜிஎஸ்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் செல்லப் பிள்ளை இயக்குநர் கே.வி.ஆனந்த். கம்பெனி இயக்குநரான இவருக்கு எப்போது வேண்டுமென்றாலும் படத்தை தயாரிக்க கல்பாத்தி குழுமம் தயாராக இருக்கும். ஏற்கெனவே , இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான், தனுஷ் நடித்த அநேகன், விஜய்சேதுபதி நடித்த கவண் படங்களைத் தயாரித்தது.

சில மாதங்களாகவே கே.வி.ஆனந்திடம் கதை இருந்தால் படத்தை தயாரிக்கத் தயாராக இருந்தது ஏஜிஎஸ். தற்பொழுது, கதையும் ரெடி என்பதால் அடுத்த நகர்வுக்குத் தயாராகிவிட்டனர். ஏற்கெனவே நம்முடை தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி 100% கைகூடிவிடும் என்றே நெருங்கிய வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றனர்.

பொதுவாக, சமூக நிகழ்வுகளையோ, பிரச்னையையோ மையமாகக் கொண்டே படங்களை இயக்குவார் கே.வி.ஆனந்த். அப்படி, சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தில் தமிழகத்தின் மாஃபியாக்களைப் பற்றிப் பேச இருக்காராம்.

கமல்ஹாசன் நடித்து வெளியான நாயகன் மாதிரியான ஒரு சினிமாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக மாஃபியா கூட்டங்களை வெளிகொண்டுவரும் விதமாக உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அயன், கோ படங்களின் ஸ்டைலில் அரசியல் சார்ந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

- தீரன்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

புதன் 24 மா 2021