மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

பிரபல தியேட்டரில் டான் ஷூட்டிங்!

பிரபல தியேட்டரில் டான் ஷூட்டிங்!

டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அட்லீயின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'டான்'. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சூரி, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறது. தற்போது டிரெண்டில் இருக்கும் சிவாங்கியும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.

டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்து முடிந்தது. இந்த ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்கள் பிரேக்கிற்கு பிறகு தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மற்றுமொரு புதுத் தகவல் என்னவென்றால், முதல் பிரதி அடிப்படையில் லைகாவுக்கு இந்தப் படத்தை தயாரித்துக் கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்காக, 40 கோடி லைகாவிடம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் சம்பளம் உட்பட 40 கோடிக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துக் கொடுக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இதனிடையே, இந்த வெள்ளிக்கிழமை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்த சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம், ரமலான் பண்டிகைக்கு , அதாவது, மே 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் பட இயக்குநர் நெல்சன் அடுத்ததாக விஜய் 65 படத்தை இயக்குவதால் டாக்டர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டாக்டரைத் தொடர்ந்து ஏலியன் படமான 'அயலான்' அதைத் தொடர்ந்து 'டான்' படமென இந்த வருடம் சிவகார்த்திகேயன் படங்களை வரிசையாக திரையரங்கில் எதிர்பார்க்கலாம். இதற்கெல்லாம் அடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பேச்சும் நிலவிவருகிறது.

-ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

புதன் 24 மா 2021