மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

இந்தியா - இங்கிலாந்து: முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து: முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் இன்று (மார்ச் 23) தொடங்குகிறது. டெஸ்ட் தொடர், டி20 தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இன்று நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்குமா என்கிற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி இரண்டு டெஸ்டுகளும் ஐந்து டி20 போட்டிகளும் அகமதாபாத்திலும் நடந்தன. தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் புனேயில் நடத்தப்படுகிறது.

இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகளும் இன்று மோதுவது 101ஆவது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 100 ஆட்டத்தில் இந்தியா 53இல், இங்கிலாந்து 42இல் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்கள் டை ஆனது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லை.

இன்றைய ஆட்டம் பகல் இரவாக நடக்கிறது. மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

-ராஜ்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 23 மா 2021