மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அலை வீசுது: அப்டேட் குமாரு

அலை வீசுது: அப்டேட் குமாரு

தேர்தல்ல அலை வீசுதுன்னு பிரச்சாரத்துக்கு வர்ற தலைவர்கள் எல்லாம் பேசுறாங்க. ஆனா அவங்களையெல்லாம் பிரச்சாரத்துக்கு வர விடாதபடி கொரோனா இரண்டாம் அலை வீசுதுன்னு அதிகாரிங்க சொல்றாங்க. எந்த அலையா இருந்தாலும் ஏப்ரல் 6 வரைக்கும் லாக் டவுன் போடமாட்டாங்க. அதுக்கு மேல தான் இருக்கு நமக்கு.

நீங்க அப்டேட் பாருங்க

செங்காந்தள்

மரங்களுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்திருந்தால மனிதர்களை "பச்சை பச்சையாய்" திட்டியிருக்கும் !!!.

நாகராஜ சோழன் MA.MLA

விவசாயியான எனக்கு டிராக்டர் ஓட்டத் தெரியும்!- முதல்வர் பழனிசாமி.

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து பண்ணிட்டு நீங்க விவசாயின்னு சொல்லுங்க....

mohanram.ko

அண்ணே, நம்ம தெருவுக்கு ஓட்டு கேட்டு வேட்பாளர் வந்திருக்கிறாரு..

வீட்டு வேலை நிறைய இருக்கு, தூக்கிட்டு வாங்கடா என் செல்லத்தை..

Siva_Ks

கடந்த சில நாட்களாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை - செய்தி

பொறுப்பா 5 மாநில தேர்தல் முடிஞ்சதும் ஏத்துவாங்க

amudu

பல இடங்களில் மெடிக்கல் ஷாப்கள், ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாக தான் செயல்படுகிறது.

மெத்த வீட்டான்

கொரொனாவுக்கு 1 வருடத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் மோடி - எடப்பாடி #

மோடி விஞ்ஞானியா ? சொல்லவே இல்ல !

Dr. M. A. N. Loganathan

காரியம் ஆகலைன்னாலும் காசைத் திருப்பிக் கேட்காத

வெள்ளந்தி மனிதர்கள் வேட்பாளர்கள்

நாகராஜ சோழன் MA.MLA

கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி

இந்தியாவையே நாங்க தான் ஆட்சி பண்றோம், ஆன பெட்ரோல் டீசல் விலை ஏற்றதுக்கு நாங்க பொறுப்பில்லன்னே, சொன்ன நம்புங்கன்னே...

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 ℝ𝕒𝕛𝕒

தெரு குழாயில் தண்ணீர் வருவது நின்று போனபோதே,

குழாயடி சண்டைகளின் சுவாரஸ்யங்களும் நின்று போய்விட்டது!

உலக தண்ணீர் தினம்

ச ப் பா ணி

குத்தி காட்டி பேசிவிட்டு, இறுதியில் நான் எப்பொதும் ஓபன் டைப் என்று சொல்வதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு...""!

தர்மஅடி தர்மலிங்கம்

நிலையான சிந்தனை இல்லாத ஒரு கட்சியால், நிலையான ஆட்சியை கொடுக்க முடியுமா? - பிரதமர் மோடி.

எங்களுக்கும் அதே 'டவுட்' தான் ஜீ ரொம்ப நாளாகவே இருக்கு.

மயக்குநன்

20-ல் அல்ல, 234 தொகுதிகளிலுமே பாஜகதான் போட்டி!- கே.எஸ்.அழகிரி.

அதே மாதிரி... 173 அல்ல, 234 தொகுதிகளிலுமே திமுகதான் போட்டி... அப்படித்தானே தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!

வாழ்க்கை தரும் அடிகளை மறைத்து நடிப்பவருக்கு விருது கொடுத்தால் இங்கே பல ஆண்களுக்கு தினம் தினம் தேசிய விருது கொடுக்க வேண்டியிருக்கும்!!

-லாக் ஆஃப்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

செவ்வாய் 23 மா 2021