மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

ஜெயலலிதா பயோபிக் : தலைவி டிரெய்லர்!

ஜெயலலிதா பயோபிக் : தலைவி டிரெய்லர்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்காக உருவாகியிருக்கும் ‘தலைவி’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பிறந்த தினமான இன்று ‘தலைவி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு விஜய் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா மற்றும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திரபிரசாத் மற்றும் மதன்கார்க்கி இருவரும் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாக இருப்பதால் மூன்று மொழிகளிலும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகையாக ஜெயலலிதாவின் வாழ்க்கை எப்படி துவங்கியது, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அரசியல் வாரிசாக ஜெயலலிதா எப்படி மாறினார், அரசியலில் பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த இன்னல்கள், அதன்பிறகான ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கை என படம் நீள்கிறது.

‘மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா’.... “என்னை அம்மாவா பார்த்தீங்கனா என் இதயத்தில் இடமிருக்கும். என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா’ என்பது போன்ற வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பாலிவுட்டில் 2019ல் வெளியான மணிகர்னிகா, பங்கா படங்களுக்காக கங்கனாவுக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்பொழுது தலைவி டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 06ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் படம் வெளியாக இருக்கிறது. தேர்தல் நாளுக்கு முன்பாக படம் வெளியாகியிருந்தால் தேர்தலின் போது பரபரப்பு ஏற்பட்டிருக்கும். எலெக்‌ஷன் தினத்துக்குப் பிறகு தான் வெளியாகிறது. இருப்பினும் தேர்தல் பரபரப்புக்கு நடுவே என்பதால் படத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

- ஆதினி

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 23 மா 2021